twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னாலே!

    |

    சென்னை: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னாலே...தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தையின் அன்பின் பின்னே.. என்கிற பாடலுக்கு ஏற்ப ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

    அப்பா பிள்ளைகளுக்கு செய்த தியாகம். இந்த தியாகத்தில் உயர்ந்த பிள்ளை அப்பாவுக்கு செய்யும் நன்றிக் கடன் என்று நிகழ்ச்சி நெகிழ்ச்சியாக இருந்தது. ஜீ தமிழ் டிவியின் ட்வீட்டர் பதிவில் இதற்கான முன்னோட்டம் வெளியாகி உள்ளது.

    வரும் ஞாயிறு இரவு ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை இயக்குநர் கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கி இருக்கார். வழக்கம் போல நிகழ்ச்சி படு சுவாரஸ்யமாக இருக்கும்..கண்டிப்பாக பாருங்கள்.

    ஆண்கள் மட்டுமே

    ஆண்கள் மட்டுமே

    வெறும் ஆண்கள் மட்டுமே என்று ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா அரங்கம் நிரம்பி வழிந்து இருப்பதை பார்க்கையில் வித்தியாசமாக இருந்தது. நிகழ்ச்சியும் இது போல வித்தியாசமானதாகவே இருக்கும். ஆண்கள் அதைச் செய்தார்கள், இதைச் செய்தார்கள்.. குடித்துவிட்டு மனைவியை அடித்தார்கள் என்று நெகட்டிவாகவே ஊடகங்களில் பெரும்பாலுமான குடிமகன்களை காண்பிக்கிறார்கள். அதைப் பார்த்து பலரும் பழகிவிட்டனர்.

    நல்ல நிகழ்ச்சி

    நல்ல நிகழ்ச்சி

    இதை மாற்றும் விதமாக ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சி வரும் வாரம் இருக்கும். ஒரு இளைஞர் சொன்னார்...அப்பா நூல் கம்பெனி வச்சு இருக்கார் சார். ரயில் மூலமா எங்களுக்கு 20 பண்டல் நூல் வரும் சார். ஒரு பண்டல் வெயிட் 60 கிலோ சார். மூணு பிளாட் ஃபார்ம் தாண்டி தூக்கிகிட்டு வரணும் சார். ஆள் வச்சா பண்டலுக்கு 50 ரூபா கொடுக்கணும்னு அப்பா தனியா தூக்கிகிட்டு போவார் சார். நான் தூக்கறேன்னு சொன்னால் கூட ஒரு பண்டல் ரெண்டு பண்டல் தூக்க விடுவார் சார். அவரே தூக்கிட்டு வருவார். கேட்டா அந்த காசை என் பிள்ளைக்கு தருவேன்னு சொல்லுவார் என்று சொன்னார்.

    பிள்ளையை கான்வென்டில்

    பிள்ளையை கான்வென்டில்

    அப்பா 10 அடி சுவற்றில் ஏறி டான்ஸ் பண்ணனும்..ஆனா ட்ரையல் பார்க்கும்போது கீழே விழுந்துட்டார். புருவத்தில் 8 தையல் போட்டாங்க என்று மகன் ஒருவர் கூற, அந்த தந்தை பேச ஆரம்பித்தார். நான் நாட்டுப்புற கலைஞன் சார்..என் பிள்ளையை சக்திக்கு மீறித்தான் படிக்க வச்சேன். கான்வென்டில் ஹாஸ்டலில் போட்டு படிக்க வச்சேன். +2 கிளாசுக்கு ஃபீஸ் கட்ட முடியாத சமயம் அது... அப்படி ஆடினா 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாக சொன்னாங்க.

    இப்போ பொளந்து கட்றேன்

    இப்போ பொளந்து கட்றேன்

    இப்போ கரகத்தை தலையில வச்சுக்கிட்டு, காலை மேலே தூக்கறது அது இதுன்னு இப்போ பொளந்து கட்றேன்.. அன்னிக்கு முதன் முதலா ட்ரையல் பார்க்கும்போது மழை பெய்ஞ்சு மரம் ஊறி இருந்தது. வழுக்கி விட்டு கீழே விழுந்தேன். ரத்தம் புருவத்தில் இருந்து பீய்ச்சி அடிக்குது. அப்பவும், நான் ஆடறேன்னு சொல்லி களம் இறங்கிட்டேன். 5 ஆயிரம் ரூபாய் இல்லாமல் போகுமே.. மகனுக்கு பணம் கட்டணுமேன்னுதான் என் மனசில் இருந்துச்சு வலி தெரியலை என்றார் அவர்.

    அப்பா வாங்கித் தரலை

    அப்பா வாங்கித் தரலை

    அப்பா எனக்கு போன் வாங்கித் தந்ததில்லை..பைக் வாங்கித் தந்ததில்லை. ஆனால், இப்போ நான் கார் வாங்கி இருக்கேன். அப்பாவுக்கு வீடு கட்டித் தந்து இருக்கேன்..என் பையன் ஒரு வயசு ஆகுது பிறந்ததில் இருந்தே காரில் சுத்தறான். இதை எல்லாம் கல்வியா எனக்குத் தந்த அப்பாவுக்கு நன்றி சொல்ல நினைக்கிறேன் சார் என்று ஒரு இளைஞர் சொன்னார். கூடவே அப்பாவுக்கு ஒரு பரிசு வாங்கி வைத்து இருப்பதாகவும், அதை இப்போது கொடுக்க விரும்புவதாகவும் சொல்லி தந்தையின் கையில் வாட்ச் கட்டி விட்டார். நிகழ்ச்சி உண்மையில் நெகிழ்ச்சியாக இருந்தது.

    English summary
    The sacrifice the father made for the children. The show was flexible as a thank-you credit to the father for the sacrifice. The preview for the tweet posted on Zee Tamil TV.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X