புது ஆர்டரை கொண்டுவரும் தமிழ் -சரஸ்வதி.. கைக்கொடுக்கும் தொழிலாளர்கள்.. சதி செய்து தடுக்கும் வில்லி!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறி வருகிறது தமிழும் சரஸ்வதியும் தொடர்.

இந்த தொடரில் படிப்பறிவில்லாவிட்டாலும் தாங்கள் கெத்து தான் என்று நிரூபித்து வருகின்றனர் தமிழ் மற்றும் சரஸ்வதி.

இவர்களுக்கு கிடைக்கும் புதிய ஆர்டரை கார்த்திக் மற்றும் சந்திரகலா இருவரும் முறியடிக்க சதித்திட்டம் தீட்டுகின்றனர்.

தமிழும் சரஸ்வதியும் தொடர்

தமிழும் சரஸ்வதியும் தொடர்

விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ளது தமிழும் சரஸ்வதியும் தொடர். இந்தத் தொடரில் விஜே தீபக் மற்றும் நக்ஷத்ரா இருவரும் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். குறைந்த அளவே படித்த இவர்கள் இருவரும் வாழ்க்கையை எதிர்கொள்ள மேற்கொள்ளும் போராட்டம் கதைக்களமாக காணப்படுகிறது.

கோதை அம்மாளின் கோபம்

கோதை அம்மாளின் கோபம்

இந்த தொடரில் தீபக் மற்றும் நக்ஷத்ரா இருவரும் இணைந்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக கோதை அம்மாள் கோபம் கொண்டு அவர்களை தள்ளி வைக்கிறார். ஆனாலும் தன்னுடைய மாமியாரின் அன்பை சிறிது சிறிதாக பெற்று வருகிறார் சரஸ்வதியாக நடிக்கும் நக்ஷத்ரா. அதில் வெற்றியும் பெறுகிறார்.

புதிய ஆர்டர்

புதிய ஆர்டர்

நிறுவனத்திலும் தன்னுடைய கணவனின் ஜிஎம் போஸ்டை அவனுக்கு மீட்டுத் தர முயற்சி மேற்கொள்கிறார் சரஸ்வதி. இதையடுத்து 1000 மெட்டீரியல்களை செய்யும் ஆர்டரை தமிழ் மற்றும் சரஸ்வதி நீண்ட முயற்சிக்கு பிறகு பெறுகின்றனர். இதையடுத்து இந்த ஆர்டரை மறுநாள் காலை 10 மணிக்குள் முடிக்க வேண்டும் என்ற டாஸ்க்கையும் ஏற்கின்றனர்.

கார்த்தி எதிர்ப்பு

கார்த்தி எதிர்ப்பு

ஆனால் இந்த ஆர்டருக்கு கார்த்தி எதிர்ப்பு தெரிவிக்கிறார். நிறுவனத்தின் நன்மதிப்பை தமிழ் குலைத்துவிடுவான் என்று அவர் கண்டிக்கிறான். அந்த இடத்திற்கு வரும் வசு தமிழ் மற்றும் சரஸ்வதிக்கு ஆதரவாக பேசியதை அடுத்து அவளை அடிக்கவும் செய்கிறான் கார்த்தி. இதையடுத்து கோதையம்மாள் பதிலுக்கு கார்த்தியை அடித்து வசுவிற்கு ஆதரவாக பேசுகிறார்.

கைக்கொடுக்கும் தொழிலாளர்கள்

கைக்கொடுக்கும் தொழிலாளர்கள்

இதனிடையே நிறுவனத்திற்கு வரும் தமிழ், சரஸ்வதி, ஊழியர்களிடம் பேசி மறுநாள் காலை 10 மணிக்குள் 1000 பீஸ்களை உற்பத்தி செய்ய வேண்டும். தரத்திலும் சமரசம் செய்யக்கூடாது என்று கூறுகிறார். இதையடுத்து தொழிலாளர்கள் முழுமூச்சுடன் இந்த வேலையை செய்கின்றனர்.

சதி செய்யும் சந்திரகலா

சதி செய்யும் சந்திரகலா

இதனிடையே சந்திரகலா, அந்த ஊழியர்களில் ஒருவருக்கு பணம் கொடுத்து, அந்த வேலையை நிறுத்த கூறுகிறார். அந்த ஊழியரும் மின்சாரத்தை துண்டித்து வேலை நடைபெறவிடாமல் செய்கிறார். மறுநாள் காலையில்தான் மின்சாரம் மீண்டும் கிடைக்கும் என்றும் கூறுகிறார். தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரமோவில் இந்தக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தடையாகும் வேலை

தடையாகும் வேலை

இதனால் தமிழ் மற்றும் சரஸ்வதி செய்வதறியாமல் திகைக்கின்றனர். தன்னுடைய அம்மாவின் அன்பை முழுமையாக பெறுவதற்காக தமிழ் மற்றும் அவருக்கு துணை நிற்கும் சரஸ்வதி இருவரும் இத்தகைய வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து கார்த்தி மற்றும் சந்திரகலாவின் சதித்திட்டங்கள் அவர்களது செயல்களை தடுக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X