மாட்டிக்கிட்ட பங்கு.. சரவணனிடம் வசமாக சிக்கிய மயில்.. பாண்டியன் குடும்பத்தில் மீண்டும் குழப்பம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஒவ்வொரு நாளும் பரபரப்பான எபிசோடுகளால் கலைகட்டதொடங்கியிருக்கிறது. ஏற்கனவே பழனியை திருமணம் செய்து வந்த சுகன்யா சதி மேல் சதி செய்து வருகிறார். எப்படியாவது பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க காத்திருக்கிறார். இந்த நிலையில், பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல் மயில் இப்படி சிக்கிவிட்டாரே என மக்கள் வேதனை படுகின்றனர். தற்போது புதியதாக வெளியாகியிருக்கும் புரோமோவால் பாண்டியன் வீட்டில் அடுத்து என்ன பூகம்பம் நடக்க போகிறதோ.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது. முதல் பாகத்தில் நடித்த மீனா கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த ஹேமா இந்த தொடரிலும் நடித்து வருகிறார். அதேபோன்று நடிகை நிரோஷா நீண்ட இடைவெளிக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதியாக அசத்தி வருகிறார். பாண்டியனின் மனைவியாகவும், 4 பிள்ளைகளுக்கு அம்மாவாக தாய்மார்களின் பேரன்பை பெற்றுள்ளார். படத்தில் நடித்த போது கிடைக்காத அன்பை சீரியலில் பெற்று வருவதாக அவரே தெரிவித்திருக்கிறார். எங்கு சென்றாலும் என் நிஜ பெயரை மறந்து கோமதி என்ற பெயரை கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் எனது கதாப்பாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என சமீபத்தில் அளித்த பேட்டியில் நிரோஷா தெரிவித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் அப்பா பேச்சை கேட்காமல் சுயமாக சம்பாதிக்க நினைத்தாலும் என்றைக்கும் அவன் அப்பா பிள்ளையாகவே இருந்து வருகிறான். அப்பா பேச்சை தட்டாத பிள்ளகளாகவே நான்கு பேரும் இருக்கிறார்கள். ராஜி எப்படியாவது போலீஸ் ஆக வேண்டும் என்ற முனைப்பில் கடுமையாக போராடி வருகிறார். இதற்கு கதிரும் ராஜிக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். மீனாவை பற்றி சொல்லவா வேண்டும் கலகலப்புக்கும் காமெடிக்கும் பஞ்சம் இல்லாமல் கட்சிதமாக வீட்டில் நடக்கும் சூழ்ச்சிகளுக்கு எல்லாம் விடயம் தேடும் ஆளாக இருக்கிறார். ஆனால், மயில் வாயை திறந்தால் பொய்யே தவிற எதுவும் இல்லை போல. கல்யாணத்தில் போலி நகையை மாற்றி நாடகமாடுவதில் தொடங்கி படித்து டிகிரி முடித்திருப்பதாகவும் பொய்யை சொல்லி வருகிறார்.
மன்னிப்பு கேட்ட மீனா: இப்படி ஒவ்வொரு நாளும் பாண்டியன் வீட்டில் களேபரம் நடந்தாலும் அதை எப்படி சரிகட்டி கூட்டுக்குடும்பமாக இருக்கிறார்கள் என்பது வியப்பை தருகிறது. வீட்டிற்குள் இருக்கும் பஞ்சாய்த்தே ரொம்ப நாள் இழுக்கிறது. இதில் அரசி காதல் விசயம் 3 அண்ணன்களுக்கும் தெரிந்து ரவுண்டு கட்டி வருகின்றனர். ஒழுங்காக இருந்த குடும்பத்திற்குள் பழனியை கட்டிட்டு வந்த சுகன்யா ஓவர் அட்டூழியம் சய்து வருகிறார். இதற்கு கோமதி அண்ணன் சக்திவேல் எவ்வளவோ பரவாயில்லை என்பதற்கு ஏற்ப தான் இருக்கிறது. மீனா, சுகன்யாவை கண்டித்ததால் சுகன்யா பாண்டியன் மற்றும் கோமதியிடம் மீனாவைப் பற்றி தவறாக சொல்லி வத்தி பத்த வைத்து விட்டார். இது தெரியாத பாண்டியனும் கோமதியும் சுகன்யா கூறுவதை நம்பி மீனாவை திட்டி மன்னிப்பு கேட்க வைக்கிறார்கள். மீனாவும் எந்த உண்மையையும் சொல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பதால் சுகன்யாவிடம் மன்னிப்பு கேட்டு விடுகிறார்.

சகுனி சுகன்யா: ஆனால் இதையெல்லாம் பார்த்த செந்தில் கோபமாக ரூமுக்குள் போய் விடுகிறார். பின்னர், மீனா, நடந்த விஷயத்தை நாம் இப்பொழுது சொன்னால் தேவையில்லாமல் வீட்டில் மறுபடியும் ஒரு பிரச்சினை ஏற்பட்டுவிடும். இதனால் அரசி படிப்பும் பாதிப்பாகும் அதனால் இப்போதைக்கு எதையும் சொல்ல வேண்டாம். ஆனால் அதே நேரத்தில் சுகன்யா செய்யும் நாரதர் வேலையும் தடுக்க வேண்டும். இதை நாம இரண்டு பேரும் சேர்ந்து பழனி சித்தப்பாவிடம் பேச முடிவு செய்து பழனி சித்தப்பாவிடம் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே சுகன்யா செய்யும் தொல்லை தாங்க முடியாமல் இருக்கும் பழனி இது வேற புது பிரச்னையா இருப்பதை கண்டு பதற்றம் அடைகிறார். அப்பொழுது காலேஜில் நடந்த விஷயத்தையும் அரசிடம் தனியாக சுகன்யா சொன்ன விஷயத்தையும் மீனா சொல்கிறார். இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு பிரச்னை முடிந்து சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது பாண்டியன் குடும்பம் இந்த சூழலில் அடுத்த வெடிகுண்டு வெடித்திருக்கிறது.

மாட்டிக்கொண்ட மயில்: பாண்டியனின் 2ஆவது மருமகள் தங்கமயில் பட்டப்படிப்பு முடித்திருப்பதாக பொய் கூறி ஏமாற்றி வருகிறார். டிகிரி முடித்து அவர் நல்ல கம்பெனியில் வேலை செய்வதாக எல்லோரும் நம்புகின்றனர். ஆனால், தங்கமயில் ஒரு ஹோட்டலில் டேபிள் துடைக்கும் வேலையை செய்து வருகிறார். தான் டிகிரி முடிக்கவில்லை என்கிற உண்மையை மறைக்க அவர் இப்படி செய்துகொண்டிருந்தார். ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் புதிய புரோமோவில் தங்கமயில் வேலை செய்யும் ஹோட்டலுக்கு சரவணன் எதார்த்தமாக சாப்பிட செல்கிறார். அப்போது அவருக்கு உணவு பரிமாறும் தங்கமயிலை பார்த்ததும் அதிர்ச்சியில உறைந்து போன சரவணன் கோபத்து எரிக்கும் பார்வையால் தங்கமயிலை பார்க்கிறான். ஆனால், மயில் கண்ணீர் வடித்து கொண்டு சொல்ல வழியேதும் இன்றி தவிக்கிறாள்.
பின்னர், கோபத்துடன் வெளியே சென்ற சரவணன் தங்கமயிலை இதுதான் நீ வேலை பாக்குற இடமா. அப்போ எதுக்கு என்னை அங்கே இறக்கி விட சொன்ன. என்னங்க நான் சொல்றத கேளுங்க என்று வருவதற்குள் பொய் சொல்லாத என்று கோபத்துடன் சரவணன் அந்த இடத்தை விட்டு செல்கிறான். வசமாக மாட்டிக்கொண்ட தங்கமயில் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாண்டியன் இதற்கு என்ன முடிவெடுப்பார். தங்கமயில் சொல்லும் அடுத்த பொய்யும் முடிவுக்கு வந்து விட்டது. சரவணன் தங்கமயிலை காப்பாற்றுவாரா அல்லது தந்தையிடம் சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

புரோமோவை பார்த்த ரசிகர்கள் அது ஒன்று்ம் நடக்காது. புரோமோ மட்டும் தான் சரவெடியாக இருக்கும். பாண்டியன் வீட்டில் அது எல்லாமே புஷ்வானம் தான். தங்கமயிலு சரவணன விட்டு போக வாய்ப்பில்லை. இயக்குநர் புதிதாக போர் அடிக்காமல் இருக்க ட்ரை பண்ணுவதாக ரசிகர்கள் ரோஸ்ட் செய்ய தொடங்கிவிட்டனர். அரசி காதல் விசயத்தையே சப்புன்னு தான் போயிட்டு இருக்கு. இதுல இது வேறயா பொறுத்திருந்து பார்ப்போம் என்று கலாய்க்கின்றனர். ஒரு பக்கம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை கலாய்த்தாலும் ஒரு சில ரசிகர்கள் இதனை ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











