இந்திய சினிமா 100: தந்தி டிவியில் ஸ்டார் கலை நிகழ்ச்சி
நட்சத்திர கலை நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே தனி வரவேற்பு உண்டு. அதனால்தான் வெளிநாடுகளில் நடைபெறும் நட்சத்திர கலைவிழாக்களை ஒளிபரப்ப தமிழக டிவிக்கள் அதிகம் போட்டு போடுகின்றன.
சில தொலைக்காட்சிகள் விருது விழா என்ற பெயரில் சினிமா நட்சத்திரங்களை அழைத்து விழா கொண்டாடுவார்கள். அதுவே மிகப்பெரிய நட்சத்திர கலைவிழாவாக மாறிவிடும்.
இந்திய சினிமாவின் 100-வது ஆண்டை கொண்டாடும் வகையில் தந்தி டிவி துபாயில் அமர்க்களமான நட்சத்திர கலைவிழா நடத்தியது. ஸ்டார் ஓயாசிஸ் 2013 என்ற அந்த நிகழ்ச்சியில் எண்ணற்ற நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

நடிகையர் பட்டாளம்
இந்த கலை நிகழ்ச்சியில் நடிகைகள் சரோஜாதேவி, குஷ்பு, பூஜா குமார், அஞ்சலி, ஆண்ட்ரியா, நமீதா, சமீரா ரெட்டி உள்பட மிக பெரிய நட்சத்திர பட்டாளமே அணிவகுத்தது.

ஆடி பாடிய கமல்
பொதுவாக நட்சத்திர கலைநிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்காக கமல் துபாய் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடி பாடியுள்ளார்.

பிரபு, மாதவன்
கமல் தவிர பிரபு, மாதவன், ஜீவா, மோகன் மற்றும் பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்று நடனமாடியுள்ளனர்.

கலா மாஸ்டர் நடனம்
இந்திய சினிமாவின் நூற்றாண்டு வளர்ச்சியை குறிக்கும் கலா மாஸ்டரின் நடன குழுவினரின் கண்ணைக் கவரும் நடன நிகழ்ச்சி இடம் பெறுகிறது. பிரபல ஆர்ட் டைரக்டர் சாபு சிரிலின் கைவண்ணத்தில் பிரம்மாண்ட செட் ஒரு மாய உலகத்தையே உருவாக்கி வியக்க வைத்துள்ளாராம்.

சுசித்ராவின் பாடல்
தமிழ் திரை உலகின் பிரபலமான பின்னணி பாடகர்கள் க்ரிஷ், சுசித்ரா, ஹரிசரண், வேல்முருகன் மற்றும் பலர் இந்த கலைநிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளனர்.

தந்தி டிவியில் ஒளிபரப்பு
துபாயில் நடந்த இந்த மெகா கலை நிகழ்ச்சி, தந்தி டிவியில் சனி, ஞாயிறுகளில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











