தந்தி டிவியில் திருநங்கை நடத்தும் நட்புடன் அப்சரா…

By Mayura Akilan

தந்தி டி.வி.யில் 'நட்புடன் அப்சரா' என்ற புதிய நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. பிரபலங்களின் பெர்சனல் பக்கங்களை புரட்டிப்பார்க்கும் இந்த நிகழ்ச்சியை நடத்தும் அப்சரா ஒரு திருநங்கை.

திருநங்கை அப்சரா விற்கு சிம்பு, தனுஷ், திரிஷா என்று நட்பு பட்டியல் அதிகம். இந்த நிகழ்ச்சிக்காக இவர் நமீதா, சிம்பு, தனுஷ், சிம்ரன், அமலாபால், உமா ரியாஸ்கான் போன்ற திரைப்பிரபலங்களை முதல் கட்டமாக சந்தித்து உரையாடியிருக்கிறார்.

இது நட்பு முறையிலான சந்திப்பாக இருக்கும். மற்றவர்களிடம் இதுவரை பகிர்ந்து கொள்ளாத பல விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார் அப்சரா.

நமீதா, அனிருத்

நமீதா, அனிருத்

அன்புடன் அப்சரா நிகழ்ச்சியில் அனுருத், நமீதா ஆகியோர் தங்களின் பெர்சனல் பக்கங்களை பகிர்ந்து கொண்டனர். வயதில் மூத்த பெண்களை காதலிப்பது தவறா? என்று நியாயம் கேட்டார் இசையமைப்பாளர் அனிருத்.

நடிக்க வந்த புதிதில் ஹீரோயின் என்று சொல்லி நடிக்க வைத்த சில இயக்குனர்கள் படம் வரும்போது ஐட்டம் கேர்ளாக திரையில் உலவவிட்ட சோகம் பற்றி மனம் திறந்தார் நமீதா.

சிம்பு – ஹன்சிகா

சிம்பு – ஹன்சிகா

ஹன்சிகாவுடன் தனக்கு இருப்பது என்ன என்பது பற்றி, ஐஸ்வர்யாவுடன் தனக்கு இருந்தது என்ன என்பது பற்றி சிம்பு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை பேசுவது நட்சத்திரங்கள் என்றாலும் வெளிப்படுவது அவர்கள் இதயம். அந்த அளவுக்கு உள்ளார்ந்த பல விஷயங்களை இதுவரை குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளாத பல தகவல்களை நட்பு முறையில் பங்கு வைத்திருக்கிறார்கள் என்கிறார் அப்சரா.

நட்சத்திர நட்பு

நட்சத்திர நட்பு

அப்சரா பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான். பிளஸ்-2 வரை சிஷ்யா பள்ளியில் படித்துவிட்டு லண்டன் யுனிவர்சிட்டியில் ஜர்னலிசம் முடித்திருக்கிறார். லண்டனில் இருந்த நேரத்தில் ஸ்காட்லாந்து யார்டு, காமன்வெல்த் செக்ரட்டரியேட் என அங்கேயும் வேலை பார்த்த அனுபவம் உள்ளது. சென்னை வந்ததும் இரண்டு ஆங்கில செய்திப்பத்திரிகைளின் வார இணைப்பு பகுதிக்கு ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் உள்ளதாம். தான் ஒரு திருநங்கையாக பிறந்ததற்காக ஒருபோதும் வருத்தப்பட்டதே இல்லை என்கிறார் போல்டான அப்சரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X