இனியாவது திருந்துவாரா? வனிதாவை வச்சு செய்த தர்ஷன்! ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil: வனிதாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் இல்லத்தில் நேற்று கொடுக்கப்பட்ட டாஸ்க்கின் மூலம் ரசிகர் பெருமக்களின் மனம் குளிரும் வகையில் வனிதாவை வச்சு செய்தார் தர்ஷன்.

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண்களில் மிகவும் பொறுமையாகவும் அனைவரையும் அனுசரித்து போகும் குணத்துடன் இருப்பவர் தர்ஷன். வயதில் சிறியவராக இருந்தாலும் கூட தர்ஷன் ஒவ்வொரு விஷயத்தை பற்றியும் ஹவுஸ்மேட்ஸ் பற்றியும் சரியாக புரிந்து கொள்ளும் விதம் அவர் மீதான மதிப்பை உயர வைத்துள்ளது.

வயதில் மூத்தவராக உள்ள மோகன் வைத்யா, ஒரு சார்பாக நடந்துகொள்வதும், மற்றவர்களை பற்றி குறை கூறுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆனால் தர்ஷன் பக்குவமாக ஒவ்வொருவரையும் கையாண்டு வருகிறார்.

தர்ஷனுக்கு நல்ல பெயர்

தர்ஷனுக்கு நல்ல பெயர்

இதனால் அவருக்கு என தனி ஆர்மி ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள். மேலும் பொதுமக்களின் மத்தியிலும் கவின், முகெனை காட்டிலும் தர்ஷனுக்கு நல்ல பெயரே உள்ளது.

வனிதாவாக தர்ஷன்

வனிதாவாக தர்ஷன்

இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் இல்லத்தில் ஆண்கள் அனைவரும் அந்த வீட்டில் உள்ள பெண்களை போல நடந்து கொள்ளவேண்டும் என டாஸ்க் கொடுத்தார் இதில் தர்ஷன், வனிதா விஜயக்குமாரை போல நடித்துக்காட்டினார்.

கார்னர் செய்த வனிதா

கார்னர் செய்த வனிதா

அப்போது முழுக்க முழுக்க தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்தும், சதா கத்திக்கொண்டே இருந்தும் வனிதாவை போல நடித்தார் தர்ஷன். அதிலும் மதுமிதாவையும் மீராவையும் வனிதா கார்னர் செய்ததையும் தெளிவாக நடித்துக்காட்டினார்.

தர்ஷனால் ஹேப்பி

தர்ஷனால் ஹேப்பி

நான் தான் கேப்டன் நான் தான் கேப்டன் என்றும் அவர் கூப்பாடு போட்டுக்கொண்டார். சொல்லப்போனால் வனிதாவை வச்சு செய்தார் தர்ஷன். இதனால் ரசிகர்கள் சற்று சந்தோஷமடைந்தனர். பிக்பாஸ் வீட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் வனிதா தான் காரணம் என்பதால் தர்ஷனின் செயலால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

சிரிப்பாய் சிரித்த வனிதா அன்ட் கோ

சிரிப்பாய் சிரித்த வனிதா அன்ட் கோ

ஆனால் இதனை பார்த்து சிரிப்பாய் சிரித்தது வனிதா அன்ட் கோ. தங்களின் நடத்தைகளை அவர்கள் திருத்திக்கொள்வது போல் தெரியவில்லை.

தர்ஷனுக்கு முதல் பரிசு

தர்ஷனுக்கு முதல் பரிசு

ஆடை, பிஹேவிங் என அச்சு அசலாக வனிதாவை போல நடித்துக் காட்டியதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றதாக தர்ஷனுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. நல்லவேலையாக இதற்காக தர்ஷனிடம் வனிதா சண்டை போடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X