அத்த நீ செத்த.. அவரை கட்டம் கட்டி நாமினேட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்! BPயை எகிற வைக்கும் பிக்பாஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 36 : Promo 2 : Sakshi BackStabs kavin : சாக்ஷியின் நம்பிக்கை துரோகம்-வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓபன் நாமினேஷன் பார்வையாளர்களுக்கு பிபியை எகிற வைத்துள்ளது.

இன்று திங்கள் கிழமை என்பதால் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் தொடங்கியுள்ளது. இதுவரை மறைமுகமாக நடைபெற்று வந்த நாமினேஷன் புராசஸ் இன்று ஓபனாக நடைபெறுகிறது.

இதனால் உள்ளே ஒன்று பேசிவிட்டு வெளியே வந்து நடித்து தப்பித்து வந்த ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இன்று ஆப்பு வைத்து விட்டார் பிக்பாஸ். பிக்பாஸ் வீட்டில் சண்டை மூட்டும் கேரக்டரான வனிதா வெளியேறிய பிறகு, அந்த இடத்தை பிடிக்க போட்டி போட்டார் மீரா.

ஓபன் நாமினேஷன்

ஓபன் நாமினேஷன்

அவரும் நேற்று வெளியேற்றுப்பட்டுவிட்டதால் அந்தப் பணியை பிக்பாஸே தொடங்கிவிட்டார் போலும். ஆமாம் இன்றைய ஓபன் நாமினேஷன் மூலம் யாரை யார் நாமினேட் செய்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்துவிடும்.

மூன்றாவது புரமோ

மூன்றாவது புரமோ

இதனால் ஒருவருக்கொருவர் மனக்கசப்பு ஏற்பட்டு தேவையில்லாத பிரச்சனையெல்லாம் பிக்பாஸ் வீட்டில் வரப்போகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

அத்த நீ செத்த

அத்த நீ செத்த

அதன்படி, ரேஷ்மாவை தர்ஷனும், முகெனும் கட்டம் கட்டி நாமினேட் செய்துள்ளனர். முகென் ரேஷ்மாவை நாமினேட் செய்யும் போது அத்த நீ செத்த என கூறி ரேஷ்மா சில விஷயங்களை ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் கொண்டுசெல்லும் போது தவறாக கன்வே செய்கிறார் என கூறுகிறார்.

சேரன் பெஸ்ட் ஃபிரன்ட்

சேரன் பெஸ்ட் ஃபிரன்ட்

அவரை தொடர்ந்து நாமினேட் செய்யும் ரேஷ்மா, சேரனின் பெயரை கூறுகிறார். யார் மேலேயோ காட்ட வேண்டிய கோபத்தை தன்மீது காட்டிய சேரனை நாமினேட் செய்வதாக கூறியுள்ளார் ரேஷ்மா. ரேஷ்மா நேற்றுதான் தனது பெஸ்ட் ஃபிரன்ட் என சேரனை கமல்ஹாசன் முன்பு கூறினார் என்பது இந்த இடத்தில் நினைவுக்கூறத்தக்கது.

எந்த லாஸ்லியாவை நம்புவது?

எந்த லாஸ்லியாவை நம்புவது?

அடுத்து ஷெரின், லாஸ்லியாவின் பெயரை நாமினேட் செய்துள்ளார்.
வந்தபோது இருந்த லாஸ்லியா வேறு, இப்போது இருக்கும் லாஸ்லியா வேறு. இப்போது இருக்கும் லாஸ்லியா ஆட்டியூட் காட்டுகிறார். அரோகென்ட்டாக இருக்கிறார். எந்த லாஸ்லியாவை நம்புவது என்று தெரியவில்லை என ஒரே போடாக போட்டார் ஷெரின்.

குழாயடி சண்டைக்கு கேரண்டி

குழாயடி சண்டைக்கு கேரண்டி

ஷெரின் பேசும் போதெல்லாம் லாஸ்லியா எதையோ வாயில் போட்டு அரைத்துக்கொண்டு நக்கலாக தலையாட்டிக் கொண்டிருக்கிறார். ஆக இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி படுசூடாக இருக்கும் என்றும் நாமினேஷன் முடிந்த பின்னர் பிக்பாஸ் வீட்டில் குழாயடி சண்டை நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X