தர்ஷனை ராஜாவாக்கிய விருந்தாளிகள்.. தூக்கிச் சென்ற கவின் அன்ட் ஷெரின்.. பிசுபிசுக்கும் பிக்பாஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 93 : வீட்டின் ராஜாவான தர்ஷன்

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு புதிதாக விருந்தாளிகள் வந்துள்ள நிலையில் புதிய டாஸ்க்கை கொடுத்திருக்கிறார் பிக்பாஸ்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் கடந்த சீசன்களை போல விருந்தினர்களை வீட்டிற்குள் அழைத்து வருகிறார் பிக்பாஸ்.

அதன்படி இன்று கடந்த சீசனில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த் மற்றும் மகத் வரவழைக்கப்பட்டுள்ளனர். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அவர்கள் டாஸ்க்கை நல்ல படியாக செய்யுமாறு அட்வைஸ் செய்தனர்.

ராஜாவான தர்ஷன்

ராஜாவான தர்ஷன்

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியிருக்கிறது. அதில் பிக்பாஸ் டாஸ்க்கின்படி, விருந்தாளிகளாக வந்துள்ள யாஷிகாவும் மகத்தும் தர்ஷனுக்கு மகுடம் சூட்டி அவரை ராஜாவாக்குகின்றனர்.

மன்னருக்கு காஃபி

மன்னருக்கு காஃபி

இதனை தொடர்ந்து லாஸ்லியாவும் முகெனும் மன்னர் சொல்லும் பணிகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் பிக்பாஸ். அதன்படி லாஸ்லியா மன்னர் தர்ஷனுக்கு காஃபி போட்டு கையில் காஃபி கப்புடன் நிற்கிறார்.

ராஜாதி ராஜ.. ராஜ குலோத்துங்க..

ராஜாதி ராஜ.. ராஜ குலோத்துங்க..

முகென் மன்னரின் வாயை துடைத்துவிடுகிறார். தொடர்ந்து ராஜாவின் வருகையை அறிவிக்கும் பொறுப்பு சாண்டிக்கு வழங்கப்படுகிறது. அதன்படி மன்னர் வருகையை ராஜாதி ராஜ.. ராஜ குலோத்துங்க.. ராஜ மார்த்தாண்ட.. என அறிவித்தப்படி செல்கிறார் சாண்டி.

தூக்கிச் சென்று அதகளம்

தூக்கிச் சென்று அதகளம்

தொடர்ந்து கவினுக்கும் ஷெரினுக்கும் வேலை கொடுத்துள்ள பிக்பாஸ் மன்னர் தூர தேசம் செல்லும் போது மன்னரை தூக்கி செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி மன்னர் தர்ஷனை ஷெரினும் கவினும் தோள் மேல் தூக்கிச் சென்று சோஃபாவில் போடுகின்றனர். இப்படியாக முடிகிறது இரண்டாவது புரமோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X