என்னாச்சு இந்த தர்ஷனுக்கு.. கஸ்தூரி அப்படி ஒரு சோகத்த சொல்லும் போது இப்படியா பண்றது?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கஸ்தூரி தனது மகள் குறித்து தனது சோகத்தை பகிர்ந்த போது சாண்டியுடன் சேர்ந்து தர்ஷனும் சிரித்தது ரசிகர்களை கடுப்படைய செய்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கான பள்ளிக்கூட டாஸ்க்கு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனை முன்னிட்டு ஹவுஸ்மேட்ஸ் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆசிரியர்கள் குறித்து பகிர்ந்து கொள்ளுமாறு கூறினார் பிக்பாஸ்.
இதைத்தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரும் தங்களின் ஆசிரியர்கள் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். சாண்டி தனக்கு நடனம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் குறித்தும் கலா மாஸ்டர் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

கஸ்தூரி உருக்கம்
இதேபோல் வனிதா பி.வாசு குறித்து தனது அனுபவத்தில் பகிர்ந்து கொண்டார். கார்டன் ஏரியாவில் நடந்த இந்த டாஸ்க்கில் கஸ்தூரி தனது ஆசிரியர் குறித்து அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். மிகவும் உருக்காமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்தது அவருடைய பேச்சு.

கலங்க வைத்த கஸ்தூரி
தான் பெற்ற மகள் 7 வயதில் நோய் வாய்ப்பட்டு அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நாட்களையும், அப்போது அவரது மகள் பட்ட துன்பத்தையும் தாயாக அவர் பட்ட துன்பத்தையும் பகிர்ந்தார் கஸ்தூரி. கஸ்தூரியில் பேச்சு பார்வையாளர்களையும் கலங்க செய்தது.

மகள்தான் சிறந்த ஆசான்
தலையில் முடியெல்லாம் கொட்டிய நிலையில், மருத்துவமனையில் அணிய கொடுக்கப்படும் தொப்பியில் தனது மகள் கலரை தேர்ந்தெடுப்பாள் என்று கஸ்தூரி பலரையும் கண்ணீர் விட வைத்தது. தனது மகள் தனக்கு பல்வேறு விஷயங்களை கற்றுக்கொடுத்திருக்கிறாள், அவள்தான் எனக்கு சிறந்த ஆசான் என்று கூறினார் அழுதார் கஸ்தூரி.

கலங்கிய சேரன்
கஸ்தூரி தொடர்ந்து பேசுவதை கேட்க முடியாமல் அழுதபடியே பாத்ரூமிற்கு சென்றார் சேரன். ஷெரின், முகென் மற்றும் லாஸ்லியாவின் முகங்களில் சோகம் பரவியிருந்ததை பார்க்க முடிந்தது.

தர்ஷனுமா இப்படி?
ஆனால் சாண்டியும் தர்ஷனும் கஸ்தூரி கண்ணீர் விட்டதையும் அவரது சோகக்கதையையும் கேட்டு சிரித்தனர். அவர்கள் சிரித்தது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்தது. குறிப்பாக நல்லவர் வல்லவர் என்று கூறப்பட்ட தர்ஷன் சிரித்தது பார்வையாளர்களை பெரும் ஏமாற்றமடைய செய்துள்ளது.
கவலைய காட்டியிருக்கலாம்
கஸ்தூரி தன்னோட சோகக் கதைய சொல்லிட்டு இருக்கும் போது எல்லாரும் கேர் பண்ணி கேட்டாங்க... ஆனால் இந்த தர்ஷன் மட்டும் சாண்டி கூட சிரிச்சு பேசிட்டு இருந்தான். அவங்களப் பிடிக்காட்டியும்.. கொஞ்சம் கவலையாச்சும் முகத்தில காட்டியிருக்கலாம். என்று கூறுகிறார் இந்த ரசிகர்.
சின்ன வருத்தம் கூட இல்லயா?
அவங்க பொண்ணு பட்ட கஷ்டம்.. அவங்க பேசி முடிக்கும்போது தர்ஷன் சிரிச்சிட்டு இருந்தான்.. அது ஏன் ?? மத்தவங்க வலிக்கு ஒரு சின்ன வருத்தம்கூட இல்லயா ?? என்று கேட்கிறார் இவர்.
என்னைப்போல் ஒருவன்
தனிமையில் அழுவதே அதற்கான காரணம் உண்மையாக இருக்கும் என்னை போல் ஒருவன்.. என சேரன் கஸ்தூரி கதையை கேட்டு தனியாக சென்று அழுததை கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
சாண்டியா மாறுகிறான்
சாண்டி கூட சேர்ந்து தர்ஷன் கொஞ்சம் கொஞ்சமா சாண்டியா மாறிட்டு வரான் என்கிறார் இந்த ரசிகர்.
முகெனுக்குதான் சப்போர்ட்
தர்ஷன் மொத்த மதிப்பு மரியாதையையும் இழந்துவிட்டார். தர்ஷனுக்கு முகென் எவ்வளவு பெட்டர். திறமையாகவும் உள்ளார். இனிமேல் முகெனுக்குதான் சப்போர்ட் செய்யப்போகிறேன் என்று கூறுகிறார் இவர்.


Click it and Unblock the Notifications











