இதோட நிறுத்திக்குங்க.. தேவையில்லாம பேசாதீங்க.. வனிதாவுக்கு வார்னிங் கொடுத்த தர்ஷன் காதலி!
Recommended Video
சென்னை: தர்ஷன் காதலி சனம் ஷெட்டி வனிதாவுக்கு வார்னிங் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயகுமார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக் குறித்து அவர் டிவிட்டி வந்தார்.
மேலும் லாஸ்லியா ரொம்ப நல்ல பொண்ணு, அவருடன் பழகிய பிறகுதான் எனக்கு அவரை பற்றி தெரிந்தது. எனவே என்னுடைய முழு ஆதரவும் அவருக்குதான், நான் அவருக்குதான் ஓட்டுப்போட போகிறேன் என்று டிவிட்டியிருந்தார்.

அவருக்கா ஆதரவு?
இதனை பார்த்த பலரும் அவர்தான் உங்களுக்கு வத்திக்குச்சி என்று பெயர் வைத்தார் அவருக்கு போயி ஆதரவு தெரிவிக்கிறீர்களே என்று சண்டை போட்டனர்.

சனம் குறித்து சர்ச்சை
இந்நிலையில் நேற்று லைவ்வில் ஃபேன்ஸின் கேள்விக்கு பதிலளித்தார் வனிதா. அப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் தர்ஷனும் ஷெரினும் நடந்துகொள்ளும் விதத்தால், வெளியில் இருக்கும் சனம் ஷெட்டி மன அழுத்தத்திற்கு ஆளாகி சைக்காட்ரிஸ்ட்டை பார்த்ததாக கூறினார்.

சனம் ஷெட்டி வீடியோ
இதனை தொடர்ந்து சனம் ஷெட்டியிடம், சைக்காட்ரிஸ்ட்டை சந்தித்தது தொடர்பாக கேள்வி எழுப்பினர் ரசிகர்கள். இதனால் பதற்றமடைந்த சனம் ஷெட்டி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வனிதாதான் காரணம்
அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் இப்போதான் என்னுடைய நண்பர் பாலாஜியுடன் லைவ் வீடியோ போட்டேன். அப்போதே எனக்கு நிறைய மெசேஜ்கள் வந்து கொண்டிருந்தன. என்னனு பார்த்தா வனிதா, பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களால் நான் சைக்காட்டிரிஸ்ட்டை பார்த்ததாக சொல்லியிருக்கிறார்.

தயவு செய்து நம்பாதீங்க
தயவு செய்து நம்பாதீங்க.. நான் ரொம்ப நல்லாருக்கேன்.. நான் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கேன். பிக்பாஸ்ல நடக்குற விஷயத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. மேலும் தர்ஷன் மீதோ அல்லது ஷெரின் மீதோ எனக்கு எந்த கோபமும் இல்லை.
தர்ஷனுக்குதான் ஆதரவு
நான் எனது வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் நான் தர்ஷனுக்குதான் ஆதரவு தெரிவித்து வருகிறேன். இப்போதும் தர்ஷனுக்காக ஓட்டுப்போடுங்கன்னுதான் கேட்டு வீடியோ போட்டிருக்கேன்.

இதோட நிறுத்திக்குங்க..
வனிதா ப்ளீஸ்.. என் பேர பயன்படுத்துற நிறுத்திக்குங்க, தர்ஷன டார்கெட் பண்றதையும் நிறுத்திக்குங்க. உங்களுக்கு என்ன நோக்கம்னு எனக்கு புரியல. என் பேர யூஸ் பண்றத நிறுத்திக்குங்க. நான் ரொம்ப நல்லாருக்கேன். தர்ஷன் வெளியே வந்த பிறகு என்னோட தர்ஷனோட ரிலேஷன்ஷிப் பத்தி நான் பேசப் போகிறேன். இவ்வாறு சனம் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
Ke Sara Sara... — Vanitha Vijaykumar (@vanithavijayku1) September 27, 2019 '>
டிவிட்டுகளை நீக்கிய வனிதா
இந்நிலையில் வனிதா பிக்பாஸ் குறித்த தனது டிவிட்டுக்களை நீக்கியுள்ளார். டிவிட்டரில் அதிக நெகட்டிவிட்டி இருப்பதாக கூறியுள்ள அவர், பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் குறித்த தனது ஒபினியன் டிவிட்டுகளை டெலிட் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











