என்ன ஒரு ஆர்வம்.. குப்பையை கிளறிய தர்ஷன்.. நக்கலடித்த ஹவுஸ்மேட்ஸ்.. எதுக்குன்னு பாருங்க!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 94 : காதல் கடிதத்தை படித்த தர்ஷன்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஷெரினும் தர்ஷனும் ஆரம்பம் முதலே தாங்கள் நல்ல நண்பர்கள் என வெளியே கூறி வருகின்றனர். ஆனால் ஷெரினுக்கு தர்ஷன் மீது ஸ்பெஷலான ஒரு அன்புதான் உள்ளது.

இதுதொடர்பாக வனிதாவிடம் கூட ஷெரின் பேசியிருக்கிறார். அதாவது, தர்ஷனை பார்த்தால் எனக்கு எல்லாமும் மறந்துவிடுகிறது. என்ன செய்கிறேன் என்றே புரியவில்லை என்றார்.

குதித்த ஷெரின்

குதித்த ஷெரின்

இதனை மனதில் வைத்துதான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வனிதா, ஷெரினுக்கு தர்ஷன் மீது அஃபையர் இருக்கு என்றார். ஆனால் இதனை ஒப்புக்கொள்ளாத ஷெரின் தாம் தூம் என்று குதித்து வனிதாவை ஒருவழியாக்கிவிட்டார்.

காட்டப்பட்ட கடிதம்

காட்டப்பட்ட கடிதம்

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தாளிகளாக வந்த மகத்தும் யாஷிகாவும் ஷெரினை ஒரு கடிதம் எழுத கூறினர். அது டெலிகாஸ்ட் ஆகாது என்றும் அவர்கள் கூறினர். ஆனால் ஷெரின் எழுதிய அனைத்தையும், எல்லோருக்கும் தெரியும்படியே கேமராக்கள் படம் பிடித்தன.

வைரலான கடிதம்

வைரலான கடிதம்

அதில் தர்ஷனுக்கு தான் எழுதப்பட்டது என்பதை நேற்றே யூகிக்க முடிந்தது. அவர் எழுதிய கடிதமும் சமூக வலைதளங்களில் வைரலானது.

கிழித்து போட்ட ஷெரின்

கிழித்து போட்ட ஷெரின்

நேற்றே அந்தக் கடிதத்தை யாருக்கு எழுதினாரோ அவரிடம் கொடுக்குமாறு விருந்தினர்களிடம் சொன்னார் பிக்பாஸ். ஆனால் அதனை விரும்பாத ஷெரின், அந்த கடிதத்தை எடுத்து கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டார்.

குப்பைத்தொட்டியை கிளறி..

குப்பைத்தொட்டியை கிளறி..

இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் ஷெரின் கிழித்துப்போட்ட கடிதத்தை குப்பைத்தொட்டியில் கிளறி தேடி எடுக்கிறார் தர்ஷன். மேலும் அதனை சேர்த்து வைத்து என்ன எழுதியிருக்கிறார் என்றும் பார்த்தார் அவர்.

செல்ல கோபம்

செல்ல கோபம்

இதுகுறித்து லிவிங் ஏரியாவில் அமர்ந்து பேசுகின்றனர் ஹவுஸ்மேட்ஸ்கள். அப்போது கவின் பாட்டுப்பாடியும், சாண்டி, என்ன ஒரு மன தைரியம் அவனுக்கு என்றும் கிண்டலடிக்கின்றனர். இதனை கவனித்த ஷெரின், நீ ஏன் அந்த கடிதத்தை படித்தாய், நீ படிக்க வேண்டும் என்றால் நான் உன்னிடம் கொடுத்திருப்பேன் என்று செல்லமாக கோபப்படுகிறார். இப்படியாக உள்ளது முதல் புரமோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X