மகளின் திருமணத்திற்காக கவலைப்படும் மதியழகன்

By Mayura Akilan

தாயுமானவன் தொடர் தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. சவால் விட்டபடி மகள் மகாவின் திருமணத்தை நடத்த முடியுமா என்பது மதியழகனின் கவலை.

மாமாவின் கவலையை மூன்றாவது மகள் ஜனனியிடம் சொல்கிறான் பாரதி. தான் அதைப்பற்றி பேசுவதாக கூறி நம்பிக்கை தருகிறாள் ஜனனி.

சொன்னது போலவே மகாவிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறாள். இது மதியழகனுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

அப்பாக்களின் கவலை

அப்பாக்களின் கவலை

திருமண வயதில் பெண்கள் இருந்தாலே அப்பாக்களுக்கு கவலைதான். அதுவும் மதியழகன் போன்ற 5 பெண்களைப் பெற்ற அப்பாவிற்கு அதீத கவலை. இதுவே மனஅழுத்தம் அதிகரிக்க காரணமாகிறது.

கல்யாணத்திற்கு சம்மதம்

கல்யாணத்திற்கு சம்மதம்

மூத்த மகள் மகாவின் திருமணம் மூன்றுமுறை நின்று போய்விடுகிறது. இந்த முறையாவது சரியாக நடக்குமா என்பதே மதியழகனின் கவலை. ஆனால் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி அப்பாவிற்கு சந்தோசம் தருகிறாள் மகா.

பழிவாங்கும் பிரபு

பழிவாங்கும் பிரபு

இப்போது பார்த்திருக்கும் மாப்பிள்ளை பிரபு பழிவாங்குவதற்காகவே மகாவை திருமணம் செய்து கொள்ள முன்வருகிறான். திருமணத்திற்கு முதல்நாள் ஓடிப்போய்விட்டால் மதியழகன் கண்ணீர் விட்டு அழுவதைப் பார்க்கலாம் என்று திட்டத்தை சொல்லி முன்னாள் பாட்னரை சந்தோசப்படுத்துகிறான்.

ப்ரமோசன் பிரச்சினை

ப்ரமோசன் பிரச்சினை

சுபாவிற்கு அலுவலகத்தில் ப்ரமோசன் கிடைப்பது அவளது கணவனுக்கு பொறமையைத்தருகிறது. தன்னைவிட ஜுனியர் அதுவும் தனது மனைவிக்கு ப்ரமோசனா? என்று கோபப்படுகிறான்.

மகாவின் திருமணம்

மகாவின் திருமணம்

பிரபு சொன்னது போல மகாவின் திருமணத்தை நிறுத்துவிடுவானா? சுபாவிற்கும் அவளது கணவனுக்கும் இடையே பிரச்சினை ஏற்படுமா? ஜனனிக்கு அப்பா மதியழகன் மீதான கோபம் தீருமா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X