குட்டீஸ்களை கவரும் விகடகவி தெனாலிராமன்
குட்டிக்குழந்தைகளுக்கு அறிவார்ந்த, புத்திக்கூர்மையான கதைகளை தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பி வருகின்றன. பஞ்சதந்திர கதைகளாகட்டும்... பரமார்த்த குரு கதைகளாகட்டும் எல்லாமே சுவாரஸ்யமாக கார்ட்டூன் வடிவில் ஒளிபரப்பாகிவருகிறது.
1001 அரேபிய இரவுகள், லிட்டில் கிருஷ்ணா, சோட்டாபீம் என சுட்டீஸ்களுக்கு ஏற்ற பல நிகழ்ச்சிகள் குழந்தைகளை கவர்கின்றன.
அந்த வரிசையில் இப்போது தெனாலிராமன் கதைகளும் சிறுவர்களை கவரும் வகையில் டிஸ்கவரி கிட்ஸ் சேனலில் ஒளிப்பாகிறது.

அறிஞர் தெனாலிராமன்
விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரின் மிகுந்த நம்பிக்கைக்குரிய ஆலோசகராக இருந்தவர் தெனாலிராமன். அரண் மனையில் இருந்த எட்டு அறிஞர்களுள் ஒருவரான இவர், கலை மற்றும் அறிவியலின் புரவலராக இருந்த கிருஷ்ண தேவராயரின் அவையை அலங்கரித்தார்.

விகடகவி
தெனாலியின் அசாதாரணமான அறிவுத்திறன் மற்றும் நகைச்சுவையுணர்வின் காரணமாக மன்னர் இவரை பெரிதும் நேசித்தார். மன்னர்கள், கவிஞர்கள், விகடகவிகள், அமைச்சர்கள் மற்றும் தூதுவர்கள் நிரம்பியிருந்த விஜயநகரப் பேரரசின் காலகட்டத்திற்கே குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்கிறது, இந்தத் தொடர்.

காளியின் அருள்
மன்னர் அளிக்கும் ஒரு மாபெரும் விருந்தில் தனது கடந்தகாலத்தை நினைவுகூர்கிறார் தெனாலிராமன். தன்னையும் தனக்குப் பிடித்தமான பூனை சுந்தரியையும் எப்படி காளியின் அருள் பெறுவதற்காக ஒரு சந்நியாசி இட்டுச்சென்றார் என்பதை விவரிக்கிறார்.

நகைச்சுவை தொடர்
காளியிடமிருந்து எப்படி அவர் வரங்களை பெற்றார்? ராஜகுருவின் வேலைக்காரனாக இருக்க ஒப்புக்கொள்ளும் தெனாலிராமன், எப்படி ராஜகுருவுக்கு பாடம் கற்பிக்கிறார் என்பது உள்பட தொடரின் அத்தனை அத்தியாயங்களும் குலுங்க வைக்கும் நகைச்சுவை தோரணங்கள். த அட்வெஞ்சர் ஆப் தெனாலி ராமன்' தொடர் டிஸ்கவரி கிட்ஸில் ஞாயிறு தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











