பெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive

தனது பிக்பாஸ் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் முதல் சீசன் போட்டியாளரான ஹாரத்தி.

Recommended Video

பிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ

சென்னை: பிக்பாஸ் முதல் சீசனில் உடை மாற்ற டிரஸ்ஸிங் ரூம் இல்லாமல் பல சமயங்களில் பெட்ஷீட்டிற்குள் உடை மாற்றியதாக வேதனை தெரிவித்துள்ளார் நடிகை ஹாரத்தி.

கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் ஹிட். அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் முக்கியமானவர் நடிகை ஹாரத்தி. முதல் சீசன் தொடங்கிய சில நாட்களிலேயே ஜூலியுடன் சண்டை போட்டு டிஆர்பியை எகிற வைத்தவர் இவர் தான்.

இந்நிலையில், தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. இது பற்றி பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீனியர் ஹாரத்தி என்ன சொல்கிறார் எனத் தெரிந்து கொள்ள அவரைத் தொடர்பு கொண்டோம்.

இதோ ஒன் இந்தியாவிற்கு ஹாரத்தி அளித்த சிறப்புப் பேட்டி...

யாரு பேக்:

யாரு பேக்:

கடந்த சீசனில் ஜூலியை நடிக்கிறார், பொய் சொல்கிறார்னு ஆரம்பத்திலேயே சொன்னவர் நீங்கள். இம்முறை போட்டியாளர்களில் அதுபோல் யாரைப் பார்த்தால் பேக் எனத் தோன்றுகிறது?
நோ கமென்ட்ஸ். ஜூலி பேக்னு நான் சொன்ன போது நீங்க நம்புனீங்களா? போக போக பார்த்து அப்புறம் தான நீங்க தெரிஞ்சிக்கிட்டீங்க... அந்த மாதிரி போக போக தெரிஞ்சுக்குவீங்க.

ஜூலி:

ஜூலி:

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு, மீண்டும் ஜூலியைச் சந்தித்தீர்களா?
இல்லை.

பிக்பாஸ் சீசன் 2விற்கு கெஸ்டாக அழைத்தால் போவீர்களா?
நிச்சயமாக போகமாட்டேன். ஏனென்றால் அது சீசன் ஒன். அது அதோடு முடிந்துவிட்டது. மீண்டும் அங்கு போக எனக்கு விருப்பம் இல்லை.

ரியாக்‌ஷன்:

ரியாக்‌ஷன்:

பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் மக்களிடம் எப்படியான ரியாக்சன் இருந்தது?
பிக் பாஸ் என் லைப்பை மாத்தவும் இல்லை. கெடுக்கவும் இல்லை. என் வாழ்வில் அது ஒரு மைல்க்கல். அவ்வளவு தான். நிறைய நல்ல விஷயங்கள் நடந்துள்ளன.

டிப்ஸ்:

டிப்ஸ்:

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அறிவுரை? டிப்ஸ் சொல்லச் சொன்னால் என்ன சொல்வீர்கள்?
அவ்வளவு தெளிவா டிப்ஸ் சொல்றதா இருந்தா நானே 100 நாள் இருந்திருப்பேனே. இப்ப இருக்கிற போட்டியாளர்கள் எல்லோருமே நல்லா ப்ளே செய்வார்கள் என நினைக்கிறேன்.

டிவிட்:

டிவிட்:

பொன்னம்பலத்தைக் கலாய்த்து ஒரு டிவிட் போட்டுள்ளீர்கள். தொடர்ந்து இதே மாதிரி நிகழ்ச்சியை விமர்சிப்பீர்களா?
சும்மா தோணியதை டிவீட் செய்தேன். தினமும் பிக் பாஸ் பாத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் எனக்கு இல்லை. எப்போதாவது தோன்றினால் டிவீட் போடுவேன்.

சாயல்:

சாயல்:

தற்போது பிக்பாஸ் வீட்டில் உங்க சாயலில் யார் இருக்கிறார்கள்?
என் சாயலில் யாரும் இல்ல. ஏன்னா என் சைஸ் அப்படி. ஒவ்வொருத்தருக்கும் ஒரு குணாதசியம் இருக்கும். அதை அப்படியே கொண்டுவர முடியாது.

எல்லோரும் சமம்:

எல்லோரும் சமம்:

தற்போது பிக்பாஸ் வீட்டில் குறிப்பிட்ட ஜாதியினர் அதிகமாக இருப்பதாக சமூகவலைதளங்களில் பேசுகிறார்களே?
பிக் பாஸ் வீட்டில் எல்லோரும் சமம் தான். எல்லோருக்கும் டாஸ்க் கொடுக்கப்படும். அதை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். இதில் சாதி, மதம் எல்லாம் இல்லை. வேலை இல்லாத சிலர் தான் இதுபோன்று கிளப்பிவிடுகிறார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது.

டிரஸ்ஸிங் ரூம்:

டிரஸ்ஸிங் ரூம்:

வீட்டின் அமைப்பு மாறியுள்ளதே? பெண்கள் பகுதியில் புதிதாக பாத்ரூம் சேர்த்துள்ளார்கள்.. ஜெயில் இருக்கு.. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பிக்பாஸ் வீட்டில் இப்போ நிறைய ஆல்ட்ரேஷன் பண்ணியிருக்காங்க. நாங்க ஒரு டிரஸ்ஸிங் ரூம் கேட்டோம். ஆனால் அதை செய்து தரவில்லை. எத்தனை நாள் பெட்ஷீட்குள்ளேயே டிரஸ் சேஞ்ச் பண்ணிருக்கோம் தெரியுமா? ஆனா இப்போ ஓரளவுக்கு சரியான வசதி பண்ணிருக்காங்க. அதான் சொல்றேனே. பிக்பாஸ் எங்கள வெச்சு டிரெயல் பார்த்திருக்கார்.

ரகசியம்:

ரகசியம்:

பிக்பாஸ் சீசன் 1 பத்தி ஏதாவது ரகசியம் சொல்லுங்களேன்..?
ரகசியம் எப்போதும் ரகசியம் தான்' என சிரித்துக் கொண்டே பேட்டியை முடித்துக் கொண்டார் ஹாரத்தி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X