ஆண்டவா இது கனவா இருக்கணும்.. விஜி கழுத்தில் ஏறிய தாலி.. கண்ணீரில் மூழ்கிய குடும்பம்

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வீரா சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. மாறனின் தம்பி வீராவின் தங்கையை திருமணம் செய்வார் என்று எதிர்பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. ராமச்சந்திரன் குடும்பத்தை பலி வாங்க துடிக்கும் விஜியின் கனவு நிறைவேறியதா வீரா இதை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள புதிய புரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் கோபத்தில் வார்த்தைகளை அள்ளி தெளிக்கின்றனர்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வீரா சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. வீராவாக நடிக்கும் வைஸ்ணவியின் நடிப்பை பார்த்து எல்லோரும் அசந்து போயுள்ளனர். மாறனும் - வீராவின் ரீல் ஜோடி ரியல் ஜோடியாக இருந்தாலும் ஹேப்பிதான் என்ற அளவிற்கு இருவருக்குமான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. மாறன் வலுக்கட்டாயமாக வீராவின் கழுத்தில் தாலியை கட்டினாலும், நாட்கள் செல்ல செல்ல மாறன் நல்லவன் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் வீரா. இப்போது மாறனை வீரா காதலிப்பது தான் பார்க்க விறுவிறுப்பை தருகிறது.

The chaos at Karthik s wedding in Veera serial

ரொமான்ஸ்: வீராவிடம் தனது காதலை வெளிப்படுத்த மாறன் செய்யும் அனைத்து முயற்சியும் வீண் தான். அவன் என்ன செய்தாலும் வீரா கண்டுகொள்வதில்லை. ஆனால், மாறனுக்கு ஒரு பிரச்னை என்றால் வீரா சும்மா விடுவதில்லை, ஆடுகளத்தில் இறங்கி ஒரு கை பார்த்துவிடுவார். வீராவின் அண்ணனை கொலை செய்தது மாறன் தான் என்பதால் ஆரம்பத்தில் வெறுப்பில் இருந்த வீரா தற்போது காதல் ரொமான்ஸ் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். மாறனை மிஞ்சும் அளவிற்கு வீராவின் காதல் தெய்வீகமாக மாறிவிட்டது. ராமச்சந்திரன் குடும்பத்தில் அக்காவும், தங்கச்சியும் மருமகளாக வந்திருந்தாலும் வீரா வந்த விதம் எதிர்பாராதது. ஆனால், கண்மணி திட்டம் போட்டு ராமச்சந்திரன் குடும்பத்தை பழிவாங்க வந்திருக்கிறார் என்பது பார்வையாளர்களுக்கு தெரிந்தாலும், ராமச்சந்திரனுக்கு இது தெரியவில்லை.

குடும்பத்தை காக்கும் வீரா: தனது அக்கா தவறான வழியில் செல்வதை உணர்ந்த வீரா அவருக்கு பாடம் கற்றுக்கொடுக்க தயராகிவிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், வீராவும், மாறனும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் என்று பார்த்தால் விஜியின் வருகை தான். ராமச்சந்திரன் தனது நண்பரின் மகளான விஜியை வீட்டிற்குள் அழைத்து வந்தது தான். வந்தவள் விஷ பாம்பு என்று தெரியாமல் பால் ஊற்றி வளர்க்கிறார் என்றும் ரசிகர்கள் பேச்சுவாக்கில் தெரிவித்துள்ளனர். ராமச்சந்திரன் குடும்பத்தில் நடக்கும் அடுத்தடுத்து குழப்பங்களுக்கு மாஸ்டர் பிளான் விஜி தான். தனது அப்பாவை கொன்ற குடும்பத்தை பழிவாங்குவதற்காக பல சதி திட்டங்களை தீட்டி வருகிறார். ஆனால், வீராவும் மாறனும் இதை முறியடித்து வருகின்றனர். அம்புதான் அவர்களது கையில் சிக்குகிறது அதை ஏவி விட்ட வில் யார் என்பதை தேடியும் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார்கள். இப்படி ஒவ்வொரு வாரமும் வீரா சிரியலில் பிரச்னையும் காதலும் மோதலுமாக கலகலப்பை ஏற்படுத்துகிறது.

The chaos at Karthik s wedding in Veera serial

பாவம் கண்மணி: ராமச்சந்திரனின் மூத்த மருமகளான கண்மணி மாறனையும் -வீராவையும் பிரிக்க பல முயற்சி செய்தும் தோல்விதான் கிடைத்தது. ஆனால், அவர் செய்யும் எந்த பிளானும் புஷ்வானம் போல் ஆகிறது. இந்நிலையில், கண்மணியின் மூன்றாவது தங்கச்சி கார்த்தியை காதலிப்பதாக வெளியான செய்தியை கேட்டு ஷாக் ஆனார். ஏற்கனவே மாறனையும் வீராவையும் பிரிக்க பிளான் பன்றோம் இப்போ 3வதாக ஒரு பிரச்னை வந்தால் கண்மணி என்ன செய்வார். கார்த்திக் - பிருந்தாவின் காதலுக்கு ஓகே சொன்ன ராமச்சந்திரன் அவங்களோட திருமணத்தையும் தடபுடலாக நடத்த ஏற்பாடு செய்துள்ளார். திருமண ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்தாலும் கண்மணி இந்த கல்யாணத்தை நிறுத்த பிளான் செய்து வருகிறார். இதற்கிடையில் இந்த கெளசிக் வந்தா என்ற வசனத்திற்கேற்ப செய்யும் தந்திரமும் மொக்கை வாங்குகிறது. பாவம் கண்மணி அவர் என்ன பிளான் போட்டாலும் பஸ்பம் ஆகிவிடுகிறது. அடுத்து நல்லதா பண்ணுங்க கண்மணி என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

விஜியின் சுயரூபம்: ராமச்சந்திரன் குடும்பத்தை பழிவாங்க மற்றொரு வில்லியாக வந்திருக்கும் விஜி தான் ரியல் வில்லி என்பது போல் தெரிகிறது. கண்மணி வாய்பேச்சுதான் விஜி சொன்னதையும் செய்றாங்க, சொல்லாததையும் பிளான் போட்டு கட்சிதமா செய்றாங்க. இதுவரைக்கும் இதை இவர் தான் செய்தார் என்று கண்டுபிடிக்காத அளவிற்கு ஆட்டம் காட்டுகிறார் விஜி. இவரிடம் இருந்து கத்துக்கோங்க கண்மணி. ராமச்சந்திரன் குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் பகடைக்காய் விஜி தான் என்பதை பார்த்து பார்வையாளர்களும் ஷாக் ஆகியுள்ளனர். அடுத்து என்ன குழப்பம் நிகழ போகிறதோ என்று எதிர்பார்த்த நேரத்தில் ரசிகர்கள் மனதில் இடியை பாய்ச்சும் அளவிற்கு புரோமோ வெளியாகியிருக்கிறது.

The chaos at Karthik s wedding in Veera serial

கார்த்திக் பிருந்தா திருமணம்?: கார்த்திக் - பிருந்தா திருமணம் நடைபெறுவதற்கு முன்பு நடிகர் ராம்ஜி அறிவழகனாக சிங்கப்பூரில் இருந்து வருவது போல் அனைவரது கண்களையும் கசிய வைத்தார். பாசமலர் 2 பார்த்தது போன்ற பாசப்பிணைப்பை பார்த்து ரசிகர்களும் கண்ணீர் வடித்தனர். வீராவும் அறிவழகன பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். இப்படியொரு அண்ணன் இல்லாத தங்கைகள் நாங்க என்ற அளவிற்கு கண்மணியும் அழுவது போல் நடித்தார். இந்நிலையில், விடிஞ்சா கல்யாணம் என்று எல்லோரும் ஆவலோடு காத்திருந்த நேரத்தில் விஜிய இடையில் ஆட்டத்தை மற்றும் அல்ல நடக்க இருந்த திருமணத்தையே நிறுத்திவிட்டார்.

விஜியின் நாடகம்: கார்த்திக் தன்னை பலவந்தமாக கெடுத்துவிட்டதாகவம், இதனால் என் மானம் போச்சு என்று ராமச்சந்திரன் குடும்பத்தினர் முன்பு கத்தி அழுக தொடங்கிவிட்டார். இது ஒரு பக்கம் இருக்க கல்யாண மாப்பிள்ளை ரூம் பூட்டிக்கொண்டு கதவை திறக்க தாமதப்படுத்தும் காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், கார்த்திக்கிற்கும் பிருந்தாவிற்கும் திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்த்த நிலையில், கார்த்திக் விஜி கழுத்தில் தாலி கட்டும் புரோமோ வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஆண்டவா இது கனவா இருக்கனும் என வேண்ட தொடங்கிவிட்டனர். விஜியை பலரும் சபிக்க தொடங்கிவிட்டனர்.

The chaos at Karthik s wedding in Veera serial

விஜியின் சபதம்: வீராவும், மாறனின் கண்களில் சோகம் வழிய கார்த்திக் தாலி கட்ட மனம் இல்லாமல் விஜியின் கழுத்தில் தாலி கட்டுகிறார். ராமச்சந்திரன் தன் பிள்ளைகள் செய்த தவறுக்கு கிடைத்த தண்டனை என நினைத்துக்கொள்கிறார். ராகவனின் கண்கள் கண்ணீரில் குளமாய் மாறிவிட்டது. தாலி கட்டிய நேரத்தில் சோகமாய் இருந்த விஜியின் கண்கள் அக்னி பிளம்பாய் நெருப்பு போல் கொப்பளிக்க தொடங்கியிருக்கிறது. அதில், ராமச்சந்திரன் குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வருவேன். கார்த்திக்கை நிம்மதியை கெடுக்காம விடமாட்டேன். இனிமேல் தான் பார்க்க போறீங்க என்று சபதம் விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X