குக் வித் கோமாளி சீசன் 4.. இன்று வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா?
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சி பிரபலமானதாக இருந்தாலும், ரசிகர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சியாக இருக்கிறது குக்வித் கோமாளி.
இதுவரை மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், நான்காவது சீசன் ஜனவரி 28ந் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது.

குக் வித் கோமாளி சீசன் 4
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் குக்குகளாக ஷெரின், ஸ்ருஷ்டி டாங்கே, விசித்ரா, நடிகர் ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஜிகர்தண்டா நடிகர் காளையன், கிஷோர் ராஜ்குமார், ஆன்ட்ரின் நௌரிகட் ஆகியோர் உள்ளனர். மூன்று சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி, இந்த சீசனில் குக்காக மாறி சமையல் செய்து அசத்தி வருகிறார்.

கிஷோர் எலிமினேட் ஆனார்
இந்த சீசனில் கிஷோர் முதல் நபராக எலிமினேட் ஆகி வெளியேறினார். அவர் வெளியேறியதை அடுத்து, இணையத்தில், சிவாங்கிக்கு பதிலாக என்னை துரத்திட்டாங்க என்றும், குக் வித் கோமாளியை கழுவி ஊற்றிய கிஷோர் என்றும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், நான் அப்படி சொல்லவே இல்லை என்று கிஷோர் விளக்கம் அளித்திருந்தார். மூன்று சீசனாக கோமாளியாக ரசிகர்களை சிரிக்க வைத்த மணிமேகலையும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

மூன்று பேர் டேஞ்சர் சோனில்
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ள போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாரம் டேஞ்சர் சோனில் விஜே விஷால், காளையன், விசித்ரா ஆகியோர் இருக்கின்றனர். இதில் எலிமினேஷன் ரவுண்டிற்காக இவர்களுக்கு உருளைக்கிழங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியேறிய போட்டியாளர்
இதில், விஜே விஷால் உருளைக்கிழங்கை வைத்து மிலாட் என்ற டிஷ்ஷூம், காளையன் உருளைக்கிழங்கு வறுவல், விசித்திரா உருளைக்கிழங்கு புலாவ் செய்திருந்தார். இதை ருசித்து பார்த்த வெங்கடேஷ் பட் எலிமினேஷன் ரவுண்டுக்கான டிஷ் இது இல்லை என்றும். வேற ஏதாவது கொஞ்சம் எஃபெக்ட் செய்து இருக்கலாம் என்றார். இதையடுத்து, இன்று காளையன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











