ஆசை ஆசையாய் காத்திருந்த நடிகைக்கு தாய் மொழியில் நடிக்க அடுத்தடுத்த வாய்ப்பு
ஹைதராபாத்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு பெண் என்றாலும்,பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னையில்தான்.
இவர் கலைஞர் தொலைக்காட்சியின் மானாட மயிலாட டான்ஸ் போட்டியின் டைட்டில் வின்னர். இதுக்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து கிடைக்காத ஏமாற்றத்தில் டிவி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தார்.

அதுவும் கைக்கொடுக்காத நிலையில்தான் அட்டகத்தி படத்தில் வாய்ப்பு வந்தது..அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருந்து.. இப்போது படு பிசி நடிகைகளின் லிஸ்டில் இடம் பிடித்து இருக்கார்.
கடந்த வருடத்தில் இவருக்கு புகழ் வாங்கித் தந்த படம் கனா.இந்த படத்தில் இவர் தனது கடுமையான உழைப்பை நூறு சதவிகிதம் கொடுத்து இருந்தார். இந்த படம் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது. அதிலும் ஐஸ்வர்யா ராஜேஷ்தான் நடிக்க இருக்கிறார்
இத்துடன் இவருக்கு மேலும் இரண்டு தெலுங்கு படங்கள் புக்காகி உள்ளன. ஒன்றில் தேவரகொண்டாவுடன் ஜோடி, மற்றொன்று ராசி கன்னா நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம். இப்போது இவர் கை வசம் மூன்று தெலுகு படங்கள்.
வீட்டில் கூட நான் தமிழ் பேசித்தான் வளர்ந்தேன்... என்ன இருந்தாலும் தாய் மொழியில் நடிப்பது பெருமைதானே என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தாய்மொழி என்னங்க.. பாலிவுட் வரைக்கும் போயிட்டு வந்துட்டீங்க..நீங்க கலக்குங்க...


Click it and Unblock the Notifications











