சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் - பாலிவுட்டில் பரபரப்பு.. நடந்தது என்ன?
மும்பை: நடிகர் சல்மான் கானுக்கு ரவுடிகள் கொலை மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் என அழைக்கப்படுபவர் சல்மான் கான். இவருக்கென்று இந்தியா முழுவதும் ரசிகர்களாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் அவர் இப்போதும் எனர்ஜி குறையாமல் திரையில் வருவதை ரசிகர்கள் உற்சாகத்தோடு வரவேற்கின்றனர்.

பாலிவுட் ஸ்டார் சல்மான் கான்
கடந்த 1988ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமான சல்மான் கான் 90களில் மிகப்பெரிய ரவுண்டு வந்தார். அவருக்கு போட்டியாக ஷாருக் கான், கிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பலர் சமகாலத்தில் இருந்தாலும் அதில் இப்போதுவரை நிலைத்திருக்கும் சல்மான் கானுக்கு இன்றுவரை பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்.

திருமணம் செய்துகொள்ளாத சல்மான் கான்
சல்மானுக்கு இப்போது 57 வயது ஆகிறது. ஆனால் இன்றுவரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும் ஐஸ்வர்யா ராயை காதலித்துவந்தார். அந்தக் காதல் பிரிவில் முடிந்தது. இதனையடுத்து பலருடன் இணைத்து சல்மான் கான் பேசப்பட்டாலும் அவருக்கு பெண்கள் மத்தியில் இன்னமும் ஒரு க்ரஷ் இருக்கிறது.

சல்மான் கான் லேட்டஸ்ட் படம்
தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி ஹிட்டான வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடித்திருக்கிறார். கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்று பெயரிடப்பட்டிருக்கும் அப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார். விரைவில் படம் வெளியாகவிருக்கிறது. அதேபோல் டைகர் 3 என்ற படத்திலும் நடித்துவருகிறார்.

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்
இந்நிலையில் சல்மான் கானின் தனிப்பட்ட உதவியாளர் பிரசாந்த் குஞ்சல்கருக்கு சல்மான் கான் கொலை செய்யப்படுவார் என்று மின்னஞ்சல் ஒன்று வந்தது. அந்த மின்னஞ்சலை ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோ அனுப்பியதாக தெரியவந்தது. அந்த மின்னஞ்சலை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரசாந்த் குஞ்சல்கர் உடனடியாக காவல் துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

பஞ்சாப் பாடகர் சிந்து மூஸ்வாலா கொலை
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் பஞ்சாப் பாடகர் இந்து மூஸ்வாலா கொலை வழக்கில் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் இந்து மூஸ்வாலா பிரபல பாடகர் ஆவார். அவர் கடந்த வருடம் 2 நடந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் பாடகரும் அரசியல்வாதியான சித்து மூசேவாலா இணைந்தார். அப்படிப்பட்ட சூழலில் அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வளவுக்கும் அவர் நடன பயிற்சி கூட சென்றது கிடையாது என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











