Lakshmi stores serial:கடந்த மூணு வரமா சிப் சிப்னே கதை போகுதே... எப்படா அதை குடுப்பீங்க?

சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் மத்திய இணை அமைச்சர் சகுந்தலா தேவி மக்களுக்கும், மகாலட்சுமியின் கொழுந்தன் கிரிக்கெட் பிளேயர் ரவிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிஞ்சுருது.

ஆனால், இதற்கு முன்னர் ரவிக்கும், பாக்கிய லட்சுமிக்கும் பீச்சில் கல்யாணம் நடந்தருது. இது சந்தர்ப்ப வசத்தால் நடந்த இந்த கல்யாணத்தை, இப்போதைக்கு யாரிடமும் சொல்ல முடியாத நிலமையில் ரவி இருக்கான்.

ஆனால் ,பாக்கிய லட்சுமி தனது தாத்தாவிடம் நடந்த உண்மைகளை சொல்லிடறா. தாத்தாவுக்கு முதலில் கோபம் வந்தாலும் அடுத்து, பேத்தி வாழ்க்கை நன்றாக இருக்கனும்ன்னு கவலை வந்துருது.

தேஜாவுக்கும் ரவிக்கும்

தேஜாவுக்கும் ரவிக்கும்

தேஜா ரவி மேல ஆசைப்பட்டு, தனது அம்மா சகுந்தலா தேவியிடம், ரவியை தனக்கு கல்யாணம் செய்து வைக்க கோரிக்கை வைக்கறா. சகுந்தலா தேவி மகாலட்சுமியின் கணவர் தேவராஜ் மூலமா சத்தியம் வாங்கிடறாங்க. ரவி தேஜாவுக்குத்தான் என்று. இப்போது, சகுந்தலா தேவி தைரியமா நிச்சயதார்த்த ஏற்பாடுகளுடன் மகாலட்சுமி வீட்டுக்கு வர்றாங்க.

சொல்வதை பார்த்துடறா

சொல்வதை பார்த்துடறா

ரவிக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை என்று சொல்ல, தேவராஜ் தம்பியை தனியா அழைச்சுட்டு போயி, செத்துருவேன்னு மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிக்க வச்சுடறார். இதை பாக்கியலட்சுமி பார்த்துட்டு, அழுதுகிட்டே வெளியில் ஓடிடறா. அவளைத் தேடி போயி ரவி சமாதான செய்ய நினைக்கையில் வீட்டில் தாத்தா எங்கே போனார்னு தெரியலை.பாக்கிய லட்சுமி வெளியில் வந்து ரவியுடன் பேச மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கறா.

வராம சிப்

வராம சிப்

கடந்த மூணு வாரமா மத்திய இணை அமைச்சர் சகுந்தலா தேவிக்கு சொந்தமான சாக்லேட் கம்பெனியில் தயாரிக்கப்படும்சாக்லேட் மிட்டாயில் போதை மருந்து கலக்கும் ரகசியம் அடங்கிய சிப்பை போலீஸ் ஸ்டேஷனில் ஓப்டைக்கப் போறேன்னு மகாலட்சுமி சொல்லிகிட்டே இருக்காங்க.எப்போதுதான் ஒப்படைப்பாங்கன்னு தெரியலை.இல்லை அதுக்குள்ளே வேறு எதுவும் பிரச்சனை வந்துடுமான்னு தெரியலை. இதை வச்சு இந்த நேரத்தை கடந்த மூணு வாரமா வீணாக்கிகிட்டு இருக்காங்க.

ரவியும் பாக்கியலட்சுமியும்

ரவியும் பாக்கியலட்சுமியும்

ரவியும் பாக்கிய லட்சுமியும் ஒன்று சேருவார்களா,இல்லை அதிகாரத் திமிரில் ரவிக்கும் தேஜாவுக்கும் கல்யாணம் நடக்குமா என்று பார்க்கலாம். .இப்போது நாட்டு நடப்பைப் பார்த்தால் மத்திய இணை அமைச்சரை யாரவது சாதாரண பெண்மணி ஜெயிக்க முடியுமா... ஜெயித்தால் அவங்கதான் குஷ்பூ..அதாவது மகாலட்சுமி

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X