Thirumanam Serial: என்னங்க உறவு இது.. கடுப்பேத்தறார் மை லார்ட்!
சென்னை:கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் ஜனனி சந்தோஷுக்கு இடையே என்னதான் உறவுன்னு நமக்கே குழப்பம் வந்துருது.
ஒரே வீட்டில் மத்தவங்க கண்ணுக்கு புருஷன் பொண்டாட்டியா வாழறாங்க.இருவருக்குள்ளும் நிறைய அன்பு இழையோடுது.
ஆனால்,இருவரும் விவாக ரத்துக்கு உடன்பட்டு அதற்கான ஏற்பாடுகளிலும் இருக்காங்க. இப்போ சொல்லுங்க இவங்களுக்குள்ள இருக்கும் உறவுக்கு பெயர்தான் என்ன?

ஜனனி சந்தோஷ்
சந்தோஷ் சக்தின்னு ஒரு பொண்ணை காதலிக்கிறான். சக்தி வீட்டுல கல்யாணத்துக்கு ஒத்துக்காததுனால சக்தி வெளிநாட்டுக்கு போயிடறா. சந்தோஷுக்கு ஜனனியை கல்யாணம் செய்து வைக்கறாங்க. கல்யாணத்து அன்னிக்கே சந்தோஷ் டைவர்ஸ் பண்ணிக்கலாமான்னு கேட்கறான்.சக்தின்னு ஒரு பொண்ணை காதலிச்சுக்கிட்டு இருக்கேன்னு சொல்றான். எவ்ளோ அதிர்ச்சியா இருக்கும் அந்த பொண்ணுக்கு. டைவர்ஸுக்கு ஓகே சொல்லிடறா.

எப்போதும் டைவர்ஸ்
இதுதான் சாக்குன்னு இருவர் வீட்டுக்கும் தெரியாமல் டைவர்ஸ் அப்ளை பண்றாங்க. அதற்கான வேலைகளையும் பார்க்கறாங்க. அதோட இருந்துக்க வேண்டியதுதானே... ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தருக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கறது என்ன... பிடிச்சதை இவள் சமைச்சு கொடுக்கறது என்ன, அவளுக்கு பிடிச்சதை சந்தோஷ் வாங்கிக்கொடுகறது என்னன்னு புதுவிதமான உறவா இருவருக்குள்ளும் ஓடிகிட்டு இருக்கு.

சந்தோஷ் ஜனனியை
சந்தோஷ் ஜனனியை முத்தமிடும் அளவுக்கு இருவரும் நெருக்கமான நேரத்தில் சந்தோஷின் காதலி சக்தியிடம் இருந்து போன் வருது.அதோடு போனை எடுத்துக்கிட்டு வெளியில் போனவன்தான் சந்தோஷ்.ஜனனி என்கிற ஜீவனை ரெண்டு நாள் மறந்துட்டான். இவளும் பாத்ரூமுக்குள் போயி குமுறி குமுறி அழுது வேதனையைத் தீர்த்துக்கிட்டா.

உங்களுக்கு தனிமை
ஜனனியை ஆசையா டின்னருக்கு கூப்பிடறான் சந்தோஷ்.ஜனனியும் வரேன்னு சொல்ல ரெஸ்டாரெண்ட் போனா எல்லோ டேபிளையும் இவனே புக் பண்ணிட்டான். அப்படி எதுக்குடா உங்களுக்கு தனிமைன்னு கேட்க வாய் துடிக்குது. பேசவுமில்லை..ஒருத்தரை ஓருத்தர் பார்த்துகிட்டே இருக்காங்க
இப்படி ஜனனி கூட சந்தோஷமா டின்னர் சாப்பிட்டுட்டு வந்தான் பாருங்க.ஒரு போன் வருது...அதுல சந்தோஷ் காதலி சக்தி பேசறா.


Click it and Unblock the Notifications











