For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    roja serial: ரோஜா பூந்தோட்டம்... காதல் வாசம்...ரோஜா சீரியல் கிளுகிளுப்பு!

    |
    Roja serial today episode | Roja Serial Review

    சென்னை: கண்ணுக்கு குளிர்ச்சியா பசுமையான வயல் வெளியில் ரோஜாவும், அர்ஜுனும் பாட்டு பாடி டான்ஸ் ஆடுவது சன் டிவியின் ரோஜா சீரியலில் ரோஜாத் தோட்டம் பார்ப்பது போல இதமாக இருந்தது...காட்சி முழுக்க காதல் வாசம்தான் ரசிகர்களுக்கு சும்மா கிளுகிளுன்னு இருந்து இருக்கும்.

    ரோஜாவும், அர்ஜுனும் மலைவாழ் பகுதிக்கு போயி ஜாலியா இருக்கலாம்னு ஜீப்பில் கிளம்பறாங்க. அப்போது வயல்வெளி, தோட்டம், துறவு என்று ஜீப் பறக்குது. இந்த பகுதிக்கு ஷூட்டிங் குழுவினர் ஷிஃப்டாகி இருப்பது ரசிகர்களுக்கு நல்ல மாற்றம்.

    தொலைக்காட்சி சீரியல்கள் என்றால், வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் மட்டும்தான் பார்ப்பார்கள் என்கிற காலம் மலையேறி விட்டது. ஆண்களும், பெரியவர்களும் கூட விரும்பி சீரியல் பார்க்கத் தொடங்கி உள்ள காலம். சீரியல் பார்த்துவிட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் டிஸ்கஸ் செய்தும் கொள்கிறார்கள்.

    அலையுது ஆன்மா

    அலையுது ஆன்மா

    ஆன்மீக பெரியவரான அம்மா அமுதநாயகி, அன்னபூரணி அம்மாவிடம், செண்பகம் ஆன்மா அலைஞ்சுக்கிட்டு இருக்குதுன்னுதானே சொன்னாங்க. இப்போ செண்பகம் உயிரோட இருக்கற மாதிரி காமிக்கறீங்களே...உயிரோட இருக்கறவங்கள் அலைஞ்சா அதுக்கு பேரு ஜீவன் அலையுதுன்னுதானே சொல்லணும்... ஆன்மான்னு எப்படி சொல்லுவாங்க என்று சந்தேகம் கேட்கிறார்கள்.

    செண்பகம் பூமாலை

    செண்பகம் பூமாலை

    செண்பகம் போட்டோவில் இருக்கும் மாலை அடிக்கடி பறந்துவந்து அர்ஜுன் கழுத்திலும், ரோஜா கழுத்திலும் விழுந்து வந்ததே அப்போ ,அந்த காட்சியை எதுக்கு வச்சீங்க என்றும் கேட்கிறார்கள்.அந்த ஆன்மீக பெரியவரான அமுதநாயகி அம்மாவே செண்பகத்துக்கு சாந்தி பூஜை செய்ய சொன்னாங்க. ஒரு ஆன்மீக பெரியவர் இப்படி சொல்வாங்களா என்றும் கேட்கின்றனர்.என்னதான் பதில் சொல்லப் போறீங்க?

    ரோஜா அர்ஜுன் டூயட்

    ரோஜா அர்ஜுன் டூயட்

    ரோஜா அர்ஜுன் இருவரும் ஜாலியா மலைப்பகுதி போனவங்க.. வயல் வெளியைப் பார்த்ததும் இறங்கி ஆட்டம் போடறாங்க. ஏய்.. ய் சின்னமச்சான்... செவத்த மச்சான் பாடலுக்கு ஆடிய ரோஜா அர்ஜுன் டான்ஸ் உண்மையில் ரசிக்கும்படி இருந்தது. இருவரும் ஒரு சினிமா ஹீரோ ஹீரோயின் போலவே டான்ஸ் ஆடி இருந்தனர்.

    அவுட்டோர் யூனிட்

    அவுட்டோர் யூனிட்

    அவுட்டோர் டான்ஸ் யூனிட், டான்ஸ் கட்சிகளுக்கு உண்டான பிளஸ் என்று ரோஜா சீரியல் குழு கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கிறார்கள். டான்ஸ் கட்சியில் மாடுகள், புல்லு கட்டு, நெல்லு கட்டு தூக்கி நிற்கும் பெண்கள் என்று வயல் வெளியில் கட் அவுட் வச்சு. அதுக்கு இடையில் டான்ஸ் ஆடும் பெண்கள், டான்ஸ் ஆடும் அர்ஜுன், ரோஜா என்று ஒரு சினிமா பாடல் காட்சியை எளிமையாக கொண்டு வந்து இருப்பதற்கு பாராட்டலாம்.

    ரோஜா சீரியலை ரசிகர்கள் டென்ஷன் இல்லாமல் பார்க்க இந்த காட்சி உதவியாக இருந்தது என்று சொல்லலாம்.

    English summary
    Roja and Arjun are singing and dancing in the green field of the sun tv's roja serial. Roja Arjun's dance to the song Hey .. ya chinnamachaan ... seevatta machan was really enjoyable.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X