2 நொடிகளின் மதிப்பு.. ஜாக்குலினுக்கு மட்டுமில்லை எல்லாருக்கும் இப்போ புரிந்திருக்கும்.. மெகா பரிசு!

சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளினியாகவும் சீரியல் நடிகையாகவும் வலம் வந்த ஜாக்குலின் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளியான கோலமாவு கோகிலா படத்தில் லேடி சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடித்திருந்தார். அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஜாக்குலின் தொடர்ந்து பல படங்களில் நடிப்பார் என்று நினைத்த நிலையில், பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.

நெல்சனே அதன் பின்னர் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் வழங்கவில்லை. மீண்டும் விஜய் டிவியில் தஞ்சமடைந்த ஜாக்குலின் இந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளராக களமிறங்கினார். விஜே பிரியங்கா, அர்ச்சனா போல இவருக்கும் டிவி சப்போர்ட் அதிகமாக இருக்கும் கடைசி வரை வருவார் என எதிர்பார்க்கப்பட்டதை போலவே ஜாக்குலினும் கடைசி வரை போட்டியில் தொடர்ந்தார்.

bigg boss tamil 8 bigg boss tamil jacquline 8

இந்நிலையில், கடைசி வாரத்தில் வீட்டில் களைகட்டிய பணப்பெட்டி டாஸ்க்கில் கலந்துக் கொண்டு ஓடிய ஜாக்குலின் ஒரு 2 செகண்ட் தாமதமாக உள்ளே நுழைந்த நிலையில், நிகழ்ச்சியில் தொடர முடியாமல் வெளியேறினார்.

2 நொடிகள் எவ்வளவு முக்கியம்: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கலாச்சார சீரழிவு நடப்பதாக பலரும் குற்றச்சாட்டுக்களை அடுக்கினாலும் விறுவிறுப்பான அந்த நிகழ்ச்சியில் போட்டி மனப்பான்மை, வெற்றி பெறவில்லை என்றாலும் பங்கேற்பதன் முக்கியத்துவம், பிசிக்கல் டாஸ்க், மெண்டல் டாஸ்க், ஒருத்தருடன் எப்படி சேர்ந்து வாழ்வது, தனித்துவத்தை எப்படி பேணிக் காப்பது என ஏகப்பட்ட பாடங்களும் கற்றுக் கொடுக்கப்பட்டுத்தான் வருகின்றன. ஜாக்குலின் தவறவிட்ட அந்த பரிசுத்தொகைக்கு காரணம் வெறும் 2 நொடிகள் தான் என்பது பல ஓட்டப் பந்தய வீரர்களுக்கும் தெரிந்திருக்கும். பல மணி நேரம் சோஷியல் மீடியாவில் வீண் அரட்டைகள் அடிக்கும் இளைஞர்களுக்கு புரியும் விதமாக ஒரு பாடத்தையும் இந்த சீசன் பிக் பாஸ் கற்றுக் கொடுத்திருக்கிறது.

8 லட்சம் கிடைக்குமா?: பரிசுப் பெட்டியை எடுத்துக் கொண்டு உரிய நேரத்தில் வீட்டிற்குள் வருபவர்களுக்குத் தான் பணப்பெட்டி கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜாக்குலின் விடாமுயற்சி செய்தாலும் கடைசி நேரத்தில் வெற்றியை இழந்த நிலையில், அவருக்கு அந்த பரிசுப் பெட்டி கிடைக்காது என்றே கூறுகின்றனர். செளந்தர்யா டைட்டில் நமக்குத்தான் அல்லது ரன்னர் அப்பாகவாவது வந்துவிடலாம் என்பதால், பணப்பெட்டியை எடுக்காமல் பாதியிலேயே திரும்பி ஓடி வந்ததை கிண்டல் செய்தாலும், அதுவும் சாதூர்யமான விளையாட்டு தான்.

பெரிய சம்பளம்: நடிகை ஜாக்குலினுக்கு பிக் பாஸ் வீட்டில் இருக்க 1 நாளைக்கு அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், 101 நாட்கள் உள்ளே இருந்த தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு அதிகபட்சமாக 25 லட்சத்து 25 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு இருக்கும் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளன. மேலும், அந்த பிக்பாஸ் மாதிரி ட்ராபியையும் அவர் உடைக்காமல் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஜாக்குலின் சம்பவம்: 80 மீட்டர்கள் ஓடி 8 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் ஜாக்குலின் குறிப்பிட்ட நேரத்திற்குள் வரமுடியவில்லை என்றாலும், அது ஒரு டைட்டான முடிவு என அவரது ஒட்டுமொத்த விடாமுயற்சியையும் பின் வாங்காமல் போட்டியில் கலந்துக் கொண்டதற்கும் அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X