சிங்கப்பூர் போனாலும் சென்னைக்கும் அடிக்கடி வருவேன்... சன் டிவி தியா மேனன்

By Mayura Akilan

சென்னை: சன் டிவியில் "சூப்பர் சேலஞ்ச்' மற்றும் "கிரேஸி கண்மணி' நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும், ஜாலியாகவும் நடத்தி வரும் வி.ஜே. தியா மேனன் திருமணம் வெகு விமரிசையாக சமீபத்தில் நடந்தது. மாப்பிள்ளை கார்த்திக் சிங்கப்பூர்வாசி என்பதால் திருமணம் முடிந்த கையோடு சிங்கப்பூரில் செட்டிலாகப் போகிறார் என்ற செய்தியால் சன் டிவி ரசிகர்கள் சற்றே வருத்தமடைந்தனர்.

சிங்கப்பூரில் உள்ள தமிழ் டிவி சேனலில் தொகுப்பாளராக வேலை செய்யப் போவதாக கூறும் தியா, சென்னைக்கும் அவ்வப்போது வந்து நிகழ்சிகளை தொகுத்து வழங்குவேன் என்கிறார். இதனால் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர் தியாவின் ரசிகர்கள்.

கிரேஸி கண்மணி, கால்மேல காசு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் தியா மேனன், கேரளத்து வரவு. சென்னை நகரின் கடைகளில் ஏறி இறங்கி அங்கே என்ன கிடைக்கும் என்று சொல்வது முதல் முக்கியமான இடங்களை பற்றி விளக்கி சொல்வதும் தான் கிரேஸி கண்மணியின் வேலை.

ஸ்டூடியோவுக்குள் இருந்து கொண்டு நேயர்களுடன் போனில் பேசி கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்பவர்களின் போனுக்கு ரீ சார்ஜ் பண்ணிவிடுவது கால்மேல காசு நிகழ்ச்சி.

சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சியையும் நடத்தி வந்த தியாவிற்கு, சிங்கப்பூரில் உள்ள கார்த்திக் மீது காதல் வர தற்போது அது திருமணத்தில் முடிந்திருக்கிறது.

மலையாள கரையோரம்

மலையாள கரையோரம்

கேரளாவில் பிறந்தாலும், தியா வளர்ந்தது,படித்தது எல்லாம் ஊட்டி குன்னூரில்தான். அப்பாவின் பணி காரணமாக கோயம்புத்தூரில் செட்டில் ஆனதால் தமிழ் அழகாக பேசுகிறார்.

இளம் தொகுப்பாளினி

இளம் தொகுப்பாளினி

10 வயதில் தொகுப்பாளராக அறிமுகமான தியா, மலையாள சேனல்களில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாராம். பத்தாவது படிக்கும்போதே டிவி விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். படித்துக் கொண்டே பகுதி நேரமாக மீடியாவில் தொகுப்பாளினியாக வேலை செய்தாராம்.

சென்னைவாசி

சென்னைவாசி

மலையாளத்தில் நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கியுள்ள தியா எம்.பி.ஏ முடித்திருக்கிறார். கோயம்புத்தூரில் இருக்கும்போதுதான் சன் டிவி தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்ததாம். தற்போது சென்னைவாசியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதாம்.

சினிமாவில் தியா

சினிமாவில் தியா

சின்னத்திரையில் நடிப்பதற்கு வந்த வாய்ப்புகளை தவிர்த்து வந்த தியா, "மகான் கணக்கு' என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்திருக்கிறாராம். இதைத் தவிர சில டாக்குமெண்டரியில் நடித்திருக்கிறாராம்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் தனி இடம் பிடித்த தியா, சிங்கப்பூரை சேர்ந்த கார்த்திக்கை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தியா.

சிங்கப்பூரில் செட்டில்

மணமகன் கார்த்திக் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனத்தில் அசோசியேட் மேனேஜராக வேலை செய்கிறாராம். திருமணம் முடிந்து சில மாதங்களில் சிங்கப்பூர் செல்லும் தியா, அங்கே உள்ள தமிழ் சேனல்களில் தொகுப்பாளினியாக வேலை செய்யப்போகிறாராம்.

சென்னைக்கும் வருவேந்

எங்கு இருந்தாலும் தமிழ் மீடியாவுக்குள்தான் இருப்பேன். அவ்வப்போது சென்னை வந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி கொடுத்துவிட்டு செல்வேன் என்கிறார் தியா. எனக்கு வருங்காலத்தில் ஏதாவது ஒரு பிசினஸ் தொடங்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது. அதற்கான முயற்சிகளும் செய்து வருகிறேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X