சன் டிவியில் புதிய தொடர் தேனிலவு
சன் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த கார்த்திகைப் பெண்கள் தொடர் நிறைவடைந்துவிட்டது. அதற்கு பதிலாக புதிய தொடர் 'தேனிலவு' ஒளிபரப்பாக உள்ளது.
திரு பிக்சர்ஸ் நிறுவனம் இந்த தொடரை தயாரிக்கிறது. முதன்முதலாக நாதஸ்வரம் தொடரை தயாரித்து இயக்கிய திருமுருகன்,கார்த்திகைப் பெண்கள் தொடரை தயாரித்தார். இப்போது தேனிலவு தொடரை தயாரித்து நடிக்கிறார்.
காமெடி, திரில்லர் கலந்த அனைவருக்கும் பிடித்த சீரியலாக இருக்கும் என்கின்றனர் தொடர் தயாரிப்பாளர்கள்.

தேனிலவு
வாழ்க்கையில் திருமணம் என்பது மறக்க முடியாத ஒரு நிகழ்வு. ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்தை அடுத்து வருகின்ற சில மாதங்கள் வாழ்நாள் முழுவதும் எண்ணி மகிழும் அனுபவங்களையும், எல்லையற்ற சந்தோஷத்தையும் தருகின்ற ஒரு காலகட்டமாகும். பிரச்சினைகளோ சங்கடங்களோ இன்றி முழுக்க முழுக்க மகிழ்ச்சி மட்டுமே நிரம்பியது இந்த தேன் நிலவு காலகட்டம்.
இப்படிப்பட்ட தேன் நிலவை கொண்டாட மலை வாசஸ்தலமே ஏற்றது என்று அங்கே தங்களது தேன்நிலவைக் கொண்டாட நான்கு ஜோடிகள் கிளம்பி வருகின்றனர்.

நான்கு ஜோடிகள்
ராம்- ரேவதி, கல்யாண்- மீனா, சுரேஷ்- வினோதினி ஆகிய ஜோடிகளுடன் வித்தியாசமான இன்னொரு ஜோடியும் கிளம்பி வருகின்றனர். அனைவரது மனதிலும் கனவுகளும் எதிர்பார்ப்பும் சந்தோஷமும் நிரம்பி வழிகின்றன.ஆனால் தேன் நிலவு வந்த இடத்தில் நிகழும் சம்பவங்கள் அவர்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக இருக்கின்றன.

பிரச்சினைகள்
அந்த தம்பதிகள் எதிர்கொள்கிற பிரச்சினைகள், ஏற்படுகிற வித்தியாசமான அனுபவங்கள் ஆகியவற்றை நகைச்சுவை, மர்மம் மற்றும் சென்டிமென்ட் கலந்து விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சித்தரிக்கும் தொடரே தேன்நிலவு.

டெல்லிகணேஷ்
தொடரில் திருமுருகன் குழுவினர் நடிக்கின்றனர் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் டெல்லிகணேஷ் நடிக்கிறார். திரைக்கதை, வசனம்: பாஸ்கர்சக்தி. ஒளிப்பதிவு: சரத்சந்தர். இசை: சஞ்சீவ் ரத்தன். பாடல்: யுகபாரதி. படத்தொகுப்பு: பிரேம். கதை, தயாரிப்பு: திருமுருகன். இயக்கம். ஈ. விக்ரமாதித்தன்.


Click it and Unblock the Notifications