அப்பாடா! துளசி அழுகை நிற்க போகுது!!

By Mayura Akilan

துளசிக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது? அம்மா விட்டுட்டு போயிட்டா. சித்தி கொடுமை, கட்டிக்கிட்ட தமிழும் பிரிஞ்சிட்டான். இந்தப்பொண்ணுக்கு விடிவுகாலமே வராதோ? என்று புலம்பிய இல்லத்தரசிகளுக்கு ஒரு நற்செய்தி.

கடந்த 4 ஆண்டுகாலமாக துளசியை அழவைத்த தென்றல் முடிவுக்கு வரப்போகிறது. பொங்கலுடன் சீரியலுக்கு சுபம் போடப்போவதாக விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தென்றல் தொடர் சன்டிவியில் 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 5 ஆண்டுகாலமாக ஒரு சீரியல் ஒளிபரப்பாகிவருகிறது. நாயகன், நாயகி, சித்தி, அப்பா, தோழிகள் என ஒரு பட்டாளமே நடித்துள்ளனர் இந்த தொடரில்.

கதாநாயகி ஸ்ருதி ராஜ்க்கு இதுதான் முதல் சீரியல். ஆரம்பம் முதலே, நடுத்தர வர்கத்திற்குரிய இளம் பெண் தோற்றத்தோடு கொஞ்சம் அப்பாவியாக நடித்து இல்லத்தரசிகளின் உள்ளங்களில் இடம் பிடித்தார். இப்போது சீரியல் முடியப்போகிறது என்று அவரும் வருத்தப்படுகிறார் துளசி.

நான் ரொம்ப லக்கி

நான் ரொம்ப லக்கி

இனிமே உங்களை எல்லாம் பார்க்க முடியாதே, இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் வருவேன் அஞ்சு வருஷம் ஆனதே தெரியுது! அந்தளவுக்கு என்ஜாய் பண்ணிட்டிருக்கேன். இது என்னோட முதல் சீரியல். சக்சஸ் பேனரான விகடன் டெலிவிஸ்டால், சன் டி.வி-னு, இந்த புராஜெக்டை பொறுத்தவரைக்கும் நான் ரொம்ப லக்கி.

நிறைய கற்றுக்கொண்டேன்

நிறைய கற்றுக்கொண்டேன்

கிட்டத்தட்ட ஸ்கூல் மாதிரி இங்க நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். இந்த ஸ்கூலோட பிரின்சிபால், வைஸ் பிரின்சிபால், ஸ்போர்ட்ஸ் மாஸ்டர் எல்லாமே எங்க டைரக்டர் குமரன் சார்தான். எங்க வீட்டுல எனக்காக சீரியல் பார்க்க ஆரம்பிச்சு, ‘தென்றல்' உபயத்துல இப்போ நல்லா தமிழ் கத்துக்கிட்டாங்க!'

பந்தா இல்லாத தமிழ்

பந்தா இல்லாத தமிழ்

சீனியரா இருந்தாலும், தீபக் பந்தா இல்லாம சகஜமா பழகுவார். ஆடம்ஸ் இருக்கிற இடம் எப்பவும் ஜாலியா இருக்கும்.

ரொம்ப மிஸ் பண்ணுவேன்

ரொம்ப மிஸ் பண்ணுவேன்

எங்க டீம்ல எல்லோருமே ஒரு ஃபேமிலியாதான் பழகிட்டு வர்றோம். சீரியலில் என் அப்பா, தங்கை, சோறு போடாத சித்தியை எல்லாம் இனி ரொம்ப மிஸ் பண்ணுவேன் என்று கவலைப்படுகிறார் துளசி.

1324 எபிசோடுகள்

1324 எபிசோடுகள்

தென்றல் தொடர் இதுவரை 1324 எபிசோடுகள் ஒளிபரப்பாகியுள்ளது. தீபக், ஸ்ருதிராஜ், சுபலேகா சுதாகர், ஹேமலதா, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

தமிழ் – துளசி

தமிழ் – துளசி

குட்டிம்மா, குட்டிப்பா என்று கொஞ்சிக்கொள்ளும் தமிழும் துளசியும் இல்லத்தரசிகளின் செல்லங்கள்.

தீபா – பிரபாகர்

தீபா – பிரபாகர்

தென்றலின் மற்றொரு ஜோடி தீபாவும், பிரபாகரமும் பிரிந்து வாழ்கின்றனர். மீண்டும் இணைவதற்கான காலம் கணிந்துள்ளது.

மோகன் – கல்யாணி

மோகன் – கல்யாணி

துளசியின் தம்பி மோகனுக்கு தனது தோழி கல்யாணியை மணமுடித்து அழகு பார்த்தாள் துளசி. பிரிந்திருந்த இருவரும் மீண்டும் இணைந்து வாழ்கின்றனர்.

பலவித அனுபவங்கள்

பலவித அனுபவங்கள்

தென்றல் தொடர் பலவித அனுபவங்களை கொடுத்தது என்கிறார் இயக்குநர் குமரன். இவர்தான் இப்போது தெய்வமகள் தொடரையும் இயக்கி வருகிறார்.

பொங்கலோடு சுபம்

பொங்கலோடு சுபம்

ஐந்து வருட காலமாக வீட்டிற்குள் வந்துபோன துளசியும், தமிழும் பொங்கலோடு அவர்கள் வீட்டுக்கு போகப்போகிறார்களாம். தென்றல் தொடருக்குப் பின்னர் அதே நேரத்தில் வேறு ஒரு புதிய தொடர் ஒளிபரப்பாகிறது என்கின்றனர் விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனத்தினர்.

இனியாவது அழுகை நிற்குமா?

இனியாவது அழுகை நிற்குமா?

எப்படியோ குடம் குடமாய் கண்ணீர் விட்ட துளசிக்கு ரெஸ் கிடைக்கப் போகிறது. புதிய சீரியலிலாவது கதாநாயகி அழாம இருப்பாங்களா? தயாரிப்பாளர்கள்தான் சொல்லணும்,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X