நொண்டியடிக்கும் தென்றல்… 1000 எபிசோடுகளை தொட்டுவிடுமா?

By Mayura Akilan

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் தொடர் 950 வது எபிசோடினை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

எப்படியாவது 1000 எபிசோடுகளை கடந்து விடவேண்டும் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர்.

ஆனால் அதற்கேற்ப கதையில் சரியான சரக்குதான் இல்லை என்கின்றனர் ரசிகர்கள்.

துளசி – தமிழ்

துளசி – தமிழ்

சித்தி கொடுமைக்கு ஆளான துளசியை பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் கரம் பிடிக்கிறான் தமிழ். மாமியார் கொடுமையும் சேரவே கண்ணீரும், கம்பலையுமாக ஒரே சோக கீதம்தான்.

துளசியின் தோழிகள்

துளசியின் தோழிகள்

தோழி தீபாவை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைக்கிறாள் துளசி. அது விவாகரத்தில் முடிந்துவிட்டது.

ஆட்ரோ ராணி

ஆட்ரோ ராணி

ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த கல்யாணியை காதலித்து திருமணம் செய்கிறான் துளசியின் மற்றொரு தம்பி மோகன். அவர்களின் தங்கைக்கும் ஆதரவு தருகிறான்.

ரேவதியின் திருமணம்

ரேவதியின் திருமணம்

தனது தங்கையை பெண் பார்க்க வந்தவன் தன் மனைவியின் தங்கையை பிடித்திருப்பதாக கூறவே கோபத்தில் அவர்களை விரட்டி விடுகிறான் மோகன். ஆனால் கல்யாணியின் தங்கை ரேவதி காதல் திருமணம் செய்து கொள்ளவே பிரச்சினை வெடிக்கிறது.

மனைவி மீது கோபம்

மனைவி மீது கோபம்

தன்னுடைய பேச்சை மீறி தங்கையின் காதல் திருமணத்திற்கு சென்ற மனைவி மீது கோபப்படுகிறான் மோகன். இனி அவர்களுக்குள்ளும் பிரச்சினை ஆரம்பிக்கிறது.

ஊருக்கு போன மாமியார்

ஊருக்கு போன மாமியார்

துளசியின் மாமியாரை மும்பைக்கு அனுப்பிவிட்டார் இயக்குநர். இனி துளசிக்கு மாமியார் கொடுமை இருக்காது. எனவே அதை வைத்தும் கதையை நகர்த்த முடியாது.

எப்படி கதை நகரும்

எப்படி கதை நகரும்

தீபாவிற்கு விவகாரத்தாகிவிட்டது. அவளை ஒருதலையாக காதலித்த கனகுவிற்கு திருமணம் முடிந்துவிட்டது. ஒருவேளை அதைவைத்து கதையை நகர்த்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

1000 மாவது எபிசோடை எட்டுமா?

1000 மாவது எபிசோடை எட்டுமா?

தென்றல் தொடர் ஆரம்பித்து 3 ஆண்டுகளை எட்ட உள்ளது ஆனால் கதையோ நகரவே மாட்டேன் என்கிறது. எப்படி முடிப்பது என்று தெரியாமல் இயக்குநர் முழிக்கிறாரோ என்னவோ? 950 எபிசோடுடன் மங்களம் பாடிவிட்டு வேறு தொடரை ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X