என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. சீரியல் ப்ரோமோ பார்த்து காண்டான ரசிகர்கள்!
சென்னை: தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலுக்கான புரோமா பலரது விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
பழைய படங்களை ரீமேக் பண்றது தான் பார்த்திருப்போம் ஆனா இப்ப கொஞ்ச நாளா பழைய படங்களை சீரியலா கன்வெர்ட் பண்ணி ரீமேக் பண்ற பேஷன் விஜய் டிவி பண்ணிட்டு இருக்காங்க.
ஆனா என்ன அது கொஞ்சம் நல்லா இருக்க மாதிரி எடுத்துருவாங்க.....அதற்கு காரணம் அந்த நாடகங்களில் நடிக்கிற ஆர்ட்டிஸ்டாக கூட இருக்கலாம்.

பழைய படங்களை காப்பி அடிச்சு
ஏற்கனவே இரண்டு மூன்று 80s மற்றும்90s ஹிட்ஸ் தமிழ் படங்கள் விஜய் டிவில சீரியலா கன்வெர்ட் ஆகி ரீமேக்காகி ஓடிக்கிட்டு இருக்கு.இந்த வரிசையில் அடுத்த கன்வெர்ட் சீரியல் தென்றல் வந்து என்னை தொடும். என்னதான் படத்தை சீரியலா கன்வெர்ட் பண்ணாலும் அதை அனைத்து தரப்பினரும் பார்க்கிற மாதிரி ரசிக்கிற மாதிரி எடுக்கிறதுதான் விஜய் டிவியோட தனிசிறப்பு.

வினோத் பாபு
விஜய் டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே சீரியலில் மலர் கேரக்டரில் வந்து பிரபலமான பவித்ரா மற்றும் சுந்தரி நீயும் நானும் சீரியல் மூலம் பரிச்சயமான வினோத் பாபுவும் சேர்ந்து பண்ற ப்ராஜெக்ட் தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும். அமெரிக்க பொண்ணுக்கும் ஆண்டிபட்டி பையனுக்கும் நடக்கும் மோதல் மற்றும் காதலை மையமாக வைத்து நடைபெறு கதையை போல் வெளியிடப்பட்டிருக்கிறது.
Recommended Video

விமர்சனம்
இந்த சீரியல் ப்ரோமோ தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக உள்ளது. பார்த்திபனின் புதிய பாதை படத்தில் துவங்கி விஜயகாந்தின் அம்மன் கோவில் கிழக்காலே மற்றும் அஜீத்தின் அமர்க்களம் வரை உள்ள படங்களின் சாயலைப் போன்றே இருந்தாலும் வினோத் பவித்ரா ஜோடியில பார்ப்பதற்கு சற்று புதுமையாகத் தான் இருக்கிறது.

நல்ல கருத்தை சொல்லலாமே
விஜய் டிவியின் பெரும்பாலான தொடர்கள் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றாலும் சில தொடர்கள் சில விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது ஹாட்ஸ்டார் ரசிகர்களும் ,மேக்கப் மற்றும் காஸ்ட்யூம் பிரியர்களும் இந்த சீரியலை வரவேற்றாலும் ஒரு சில சமூக செயற்பாட்டாளர்கள் இதை விஜய் டிவியின் அடுத்த நச்சுத்தன்மை பரப்பும் சீரியல் என்று திட்டியும் வருகின்றனர். காரணம் அதில் இடம் பெற்றுள்ள காட்சிகள் அப்படி இருக்கின்றன.

நச்சு பரப்புவதா
அபத்தமான பல கருத்துக்களையும், பத்தாம் பசலித்தனத்தையும் சீரியல்கள் பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவும் அப்படிப்பட்ட ஒரு சீரியல்தான் என்பது பலரின் விமர்சனமாக இருக்கிறது. இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் விஜய் டிவியில் ஷார்ட் டைம் சீரியல்களே எடுப்பதால் சீரியல் ரீச்சானா அதை அப்படியே எக்ஸ்டண் பண்ணுவோம் இல்லாட்டி கொஞ்ச நாளிலேயே பேக்கப் என்று வியாபார ரீதியான சீரியல்களை எடுத்து தள்ளி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











