தேனிலவு கசந்து போச்சே…. கண்ணை கசக்கும் நாயகி!

By Mayura Akilan

நெடுந்தொடர்களில் இவருக்கு பதில் இவர் என்று கார்டு போடுவது என்பது பெரிய விசயமில்லை. ஆனால் தேனிலவு தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தயாரிப்பாளர் திருமுருகன் தொடரில் நடிப்பதில் இருந்து முதலில் விலகினார்.

இப்போதே தொடரின் நாயகி நிமா பாதியிலேயே ஓட்டம் பிடித்து விட்டாராம். அதற்குக் காரணம் தொடர் தயாரிப்பாளர்கள் தந்த குடைச்சல்தான் என்கின்றனர்.

திரு பிச்சர்ஸ் தயாரிக்கும் நாதஸ்வரம் தொடரில் இருந்தே பல நட்சத்திரங்கள் இப்படித்தான் கழன்று கொண்டனர். அதேபோல் முந்தைய தயாரிப்பான கார்த்திகைப் பெண்கள் தொடரிலும் இதே சிக்கல் ஏற்பட்டது. அதோடு நாயகி ஸ்ருதியின் இரண்டாவது திருமணம் அவருக்கு சிக்கல் ஏற்பட்டு தொடரை பாதியிலேயே தயாரிப்பாளர்கள் முடிக்க வேண்டியதாயிற்று. இப்போது தேன்நிலவு தொடரிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

சன் டிவியில் தேனிலவு

சன் டிவியில் தேனிலவு

சன் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தேனிலவு. இந்த தொடர் காமெடி, திரில்லர் தொடர் திருமுருகனின் திரு பிக்சர்ஸ் நிறுவனம் இந்த தொடரை தயாரிக்கிறது. ராம்- ரேவதி, கல்யாண்- மீனா, சுரேஷ்- வினோதினி ஆகிய ஜோடிகளுடன் வித்தியாசமான இன்னொரு ஜோடியும் கிளம்பி வருகின்றனர். இவர்கள் சந்திக்கும் பிரச்சினைதான் தொடரின் கதை.

டெல்லி கணேஷ்

டெல்லி கணேஷ்

இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் டெல்லி கணேஷ் நடிக்கிறார். திரைக்கதை, வசனம்: பாஸ்கர்சக்தி. ஒளிப்பதிவு: சரத்சந்தர். இசை: சஞ்சீவ் ரத்தன். பாடல்: யுகபாரதி. படத்தொகுப்பு: பிரேம். கதை, தயாரிப்பு: திருமுருகன். இயக்கம். ஈ. விக்ரமாதித்தன்.

விலகிய திருமுருகன்

விலகிய திருமுருகன்

இந்த தொடரில் 50 எபிசோடுகள் வரை தயாரிப்பாளர் திருமுருகன் நடித்தார். ஆனால் திடீரென அவர் விலகவே, இவருக்குப் பதில் இவர் என கார்டு போட்டு வேறொருவர் நடித்து வருகிறார்.

மாறிய கதாநாயகி

மாறிய கதாநாயகி

இப்போது அவருக்கு ஜோடியாக நடித்த கதாநாயகியும் மாறிவிட்டார். காரணம் கேட்டால் தொடர் தயாரிப்பாளர்களின் குடைச்சல் தாங்கமுடியவில்லை என்ற பதில்தான் கிடைக்கிறது.

பாலக்காட்டுப் போன நிமா

பாலக்காட்டுப் போன நிமா

தேனிலவு தொடரில் நடித்த நடிகை நிமா, கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர். இவர் ஏற்கனவே திருமுருகனின் கார்த்திகைப் பெண்கள் தொடரில் நடித்தவர். தேனிலவு தொடரிலும் இவர் நடிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தவர் தயாரிப்பாளர் திருமுருகன்தானம். ஆனால் தேனிலவு தொடர் இயக்குநரின் இம்சை தாங்காமல்தான் வெளியேறிவிட்டதாக கூறுகின்றனர் நிமாவின் உறவினர்கள்.

மறக்க நினைக்கிறேன்

மறக்க நினைக்கிறேன்

தொடரில் இருந்து விலகியது ஏன் என்று கூறியுள்ள நிமா, நடிப்பை கைவிட்டுவிட்டு படிக்கப் போவதாக கூறியுள்ளார். தேனிலவு சீரியலில் நடித்ததை மறக்க நினைக்கிறேன் என்றும் விரக்தியோடு கூறியுள்ளார் நிமா.

குடும்பத்தை மிஸ் பண்றேன்

குடும்பத்தை மிஸ் பண்றேன்

நாதஸ்வரம் தொடர் காரைக்குடியிலும், தேனிலவு தொடர் கொடைக்கானலிலும் நடந்த காரணத்தால் குடும்பத்தை கவனிக்க முடியாமல் போனது இதனால் தேனிலவு தொடரில் நடிப்பதில் இருந்து விலகிவிட்டதாக கூறுகிறார் திருமுருகன். ஆனால் நிமா விலகியது பற்றி கேட்டதற்கு அவங்க சீரியலில்தானே நடிக்கிறாங்க என்று காமெடி செய்கிறார் திருமுருகன்.

வசைபாடும் நிர்வாகிகள்

வசைபாடும் நிர்வாகிகள்

எது எப்படியோ தேனிலவு போன தம்பதிகள் இப்படி பார்ட் பார்ட்டாக கழன்று கொள்வதற்கு காரணம் தொடரின் தயாரிப்பாளர்களுக்கே வெளிச்சம் என்கின்றனர். சன் டிவியில் செல்வாக்கு இருப்பதை காரணம் காட்டியே புரடெக்சன் மேனேஜரும், திரு பிக்சர்ஸ் நிர்வாகியும் மரியாதை இல்லாமல் நடிகர், நடிகையர்களை நடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இதற்கு திருமுருகன் என்ன பதில் சொல்லப் போகிறார்?.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X