Thenmozhi BA serial: ஜாக்குலினுக்கு மைனஸ் ப்ளஸாகிப் போச்சே!
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் இதுவரைக்குமான நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் ஜாக்குலின் கடைசித் தொகுப்பாளினி. இவருக்குப் பிறகு புதிய தொகுப்பாளினி யாரையும் விஜய் டிவி இன்னும் அறிமுகப் படுத்தவில்லை.
முதலில் விஜய் டிவியின் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் பணியை செவ்வனே செய்து வந்தார் ஜாக்குலின்., அவர் குரல் பற்றி கூட இருப்பவர்களே நிகழ்ச்சியில் போது, கலாய்த்தாலும் விஜய் டிவியில் கலாய்ப்பு புதுசா என்ன. அதனால் அங்கு எல்லாருமே டேக் இட் ஈஸி பாலிசிதான்.
ஜாக்குலின் முக்கியமாக பார்க்க நம்ம பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி, எளிமையாக உள்ளது உள்ளபடி இருந்ததால், அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகியது. விளைவு கோல மாவு கோகிலா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

கோல மாவு கோகிலா
கோலமாவு கோகிலா படத்தில் முதல் படம், அதுவும் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவுடன் நடிக்க வாய்ப்பு வந்தது என்பது இவர் பெற்ற அதிர்ஷ்டம்தான். இதை கப்பென்று பிடித்துக் கொண்ட ஜாக்குலின், அந்த படத்தில் மிக நன்றாகவே நடித்து இருந்தார். அதுவும் துணிச்சலாக சொந்த குரலில் பேசி. இதுவே கூட ஜாக்குலினுக்கு அந்த படத்தில் கேரக்டர் மிக பிளஸாக அமைந்தது.படத்தின் வெற்றியில் இவருக்கும் பங்கு இருந்ததாக பேசப்பட்டது.

நகைச்சுவை கவுன்டிங்
நகைச் சுவையில் பாடி லாங்குவேஜ் ஒரு டைப், ஒண்ணுமே அலட்டிக்க்காமல் கவுன்டர் கொடுப்பது ஒரு ரகம். இதில் இரண்டாவது ரகத்தை வைத்து விஜய் டிவியில் தேன்மொழி பிஏ ஊராட்சி மன்றத் தலைவர் என்று புது சீரியலை விரைவில் ஓளிபரப்ப இருக்காங்க. இதில தேன்மொழியாக நம்ம ஜாக்குலின் நடிச்சு இருக்கார்.பரவாயில்லை தேன்மொழி ஒரு படத்தின் டைட்டில்தான். அதுக்கு பிறகான அடைமொழியை விஜய் டிவியே மெனக்கெட்டு வச்சு இருக்காங்க.

வெளியில் மிரட்டல்
வீட்டில் மிக செல்லமாக வளரும் தேன்மொழி, வெளியில் சுட்டி, மிரட்டல் கேரக்டர் போல .ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிச்சுடறார். இவருக்கு எதிராகப் போட்டியிட்டவர் வீட்டுக்கே மருமகளாகவும் போகிறார். இவருக்கு புகுந்த வீட்டில் ஆரத்தி எடுக்க, அத்தனை கூட்டத்தில் அதைத் தட்டி விட்டுடறாங்க மாமியார்.

வேலைக்காரி மருமகளா?
ஆரத்தி தட்டை தட்டிவிட்ட மாமியார், அதோடு நிற்காமல், நீ இந்த வீட்டுக்கு வேலைக்காரியா இருக்கத்தான் லாயக்கு என்று ரொம்ப சீரியஸா சொல்ல, அப்போ இந்த வேலைக்காரிங்கதான் உங்க வீட்டு மருமகள்களான்னு சிரிச்சுகிட்டே கேட்டுகிட்டு, தள்ளுங்கன்னு சொல்லிட்டு உள்ளே போறாங்க ஜாக்குலின். இப்படி காமெடியாவும், டிராஜடியாவும் சீரியல் போகும் போல இருக்குது.
இதுல ஒன்றை கவனிச்சீங்களா... ஜாக்குலின் குரலும் கேட்க நல்லாத்தான் இருக்குது.


Click it and Unblock the Notifications