தென்றல் வந்து என்னைத்தொடும் …. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் !
சென்னை : விஜய் டிவியில் தென்றல் வந்து என்னைத்தொடும் என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், தேன் மொழி பிஏ, பாக்கியலட்சுமி, ராஜா ராணி என பல நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது புதியதாக ஒரு சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
பெருகி வரும் தொழில்நுட்ப வளச்சியின் காரணமாக திரைப்படங்களை விட தொலைக்காட்சி சீரியல்களே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. அதனை கருத்தில் கொண்டு திரைப்படங்களுக்கு நிகராக சீரியல்களை கொண்டு வர தொலைக்காட்சிகள் நாள்தோறும் புதிய புதிய முயற்சிகளில் களமிறங்கி வருகின்றன.
அனைத்து சீரியல்களும் குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் முன்விரோதம், பொறாமை ஆகியவற்றை மையமாக கொண்டு கதை நகர்ந்தாலும், அடுத்த நாள் எபிசோட்டில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பே ரசிகர்களை சீரியல் பக்கம் திருப்பி விடுகிறது.
விஜய் தொலைக்காட்சி ஒரு புதிய சீரியலின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. தென்றல் வந்து என்னைத்தொடும் என்று அந்த நெடுஞ்தொடருக்கு பெயர் வைக்கபட்டுள்ளது. வெளிநாட்டில் படித்த பெண், தமிழ்நாட்டின் கலாச்சாரம் மாறாமல் இருக்கிறார். அவருக்கு திடீரென நிகழும் திருமணம் என ப்ரோமோவே மிகவும் சுவாரசியமாக உள்ளது. இத்தொடர் எப்போது ஒளிபரப்பாகும் என்ற தகவலை விஜய் டிவி வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications











