பிக்பாஸ் வீட்டில் வனிதா இடத்தை பிடிக்க போட்டா போட்டி! மீராவின் இன்னொரு முகம்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டுள்ளதால் அவரின் இடத்தை பிடிக்க பிக்பாஸ் போட்டியாளர்களிடையே போட்டா போட்டி நடக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த வனிதா விஜயகுமார் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். யாரையும் மதிக்காமல் சண்டை போட்டு வந்தார் வனிதா.

மேலும் வீட்டில் நடக்கும் சின்ன சின்ன பிரச்சனைகளையும் ஊதி பெரிதாக்கி வந்தார். கேப்டனாக இருந்த போது கூட ஒரு சார்பாக நடந்து கொண்டார்.

வெளியேற்றிய மக்கள்

வெளியேற்றிய மக்கள்

ஃபாத்திமா பாபு, மதுமிதா, மீரா, சேரன் என அனைவரிடமும் சண்டை போட்டு வந்தார் வனிதா. இந்நிலையில் கடந்த வாரம் எவிக்ஷன் லிஸ்ட்டுக்கு வந்த அவரை ஓட்டு போடாமல் வெளியேற்றினர் மக்கள்.

மேடையில் பேசிய பேச்சு

மேடையில் பேசிய பேச்சு

அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றியப்பின் வனிதாவை ஏன்டா வெளியேற்றினோம் என நொந்துக்கொள்கின்றனர். காரணம் வெளியே வந்த பிறகு அவர் கமலுடன் மேடையில் பேசிய பேச்சு.

சுவாரசியம்

சுவாரசியம்

வனிதா போடும் சண்டையால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களும் அதையே கூறி வருகின்றனர்.

மார்தட்டும் மீரா

மார்தட்டும் மீரா

பிக்பாஸ் வீட்டின் டஃப் கன்டெஸ்டன்ட்டான வனிதா வெளியேற்றப்பட்டதால் இனி யார் அந்த இடத்தை நிரப்ப முடியும் என பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில் தான்தான் அடுத்த வனிதா என மார்தட்டி வருகிறார் மீரா.

பிரச்சனையில் சிக்கியவர்

பிரச்சனையில் சிக்கியவர்

என் வாயை பற்றி தெரியாது, நான் அசிங்க அசிங்கமா பேசுவேன் பச்சை பச்சையா கேட்பேன் என்று நேற்று கூறினார். இதனால் அடுத்த வனிதாவாக வர ஆசைப்படுகிறார் மீரா. ஏற்கனவே ஹவுஸ் மேட்ஸ்களுடன் பல பிரச்சனையில் சிக்கியவர் மீரா.

முகெனுக்கு வேப்பிலை

முகெனுக்கு வேப்பிலை

அவரை தொடர்ந்து மோகன் வைத்யாவும் கொளுத்தி போடும் வேலையை தொடங்கியுள்ளார். சரவணன் குறித்து பேசி முகெனுக்கு வேப்பிலை அடித்துவிடுகிறார் மோகன் வைத்யா.

பிரளயத்தை ஏற்படுத்திய சாக்ஷி

பிரளயத்தை ஏற்படுத்திய சாக்ஷி

சாக்ஷி குறித்து சொல்லவே வேண்டாம் முதல் வாரத்திலேயே அவரது வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிட்டது. மீரா சொல்லாத ஒன்றை சொல்லியதாக கூறி பிக்பாஸ் வீட்டில் பிரளயத்தை ஏற்படுத்தினார்.

கடும் போட்டி

கடும் போட்டி

பிக்பாஸை பொருத்தவரை அடுத்த வனிதாவாக ஆசைப்படுவதில் மீரா, மோகன் வைத்யா, சாக்ஷி ஆகியோரிடையே கடுமையான போட்டி நடக்கும் என தெரிகிறது. இதில் முன்னிலை பெறப்போவது யார் என்பது வரும் எபிசோடுகளில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X