Don't Miss!
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நீங்க ஏற்பாடு செய்த எவிக்ஷன் இல்ல, ஆனால் இருக்கு: காலையிலேயே குழப்பும் கமல்
சென்னை: பிக் பாஸ் 3 ப்ரொமோ வீடியோவில் கமல் ஹாஸன் குழப்பும்படி பேசுகிறார்.
ஞாயிற்றுக்கிழமை வந்தாலே பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவாரோ என்று பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இந்நிலையில் இந்த வாரம் மதுமிதா எதிர்பாரா விதமாக வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து இன்று யாராவது வெளியேறுவார்களா, இல்லையா என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்த நிலையில் அது குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
கமல்
உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். உணர்ச்சிகள் நம்மை கட்டுப்படுத்தக் கூடாது என்று கமல் ஹாஸன் கூறுவதுடன் ப்ரொமோ வீடியோ துவங்குகிறது. அந்த நால்வரில் ஒருவர் வெளியே சென்றுவிட்டதால் நீங்கள் ஏற்பாடு செய்த எவிக்ஷன் இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் ஒருவர் எவிக்ட் செய்யப்படுவார் என்று கமல் தெரிவித்துள்ளார்.
குழப்பம்
ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் என்ன கமல் சார், நீங்கள் ட்வீட் போடுவது போன்றே பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பேசி எங்களை குழப்புகிறீர்களே என்று தெரிவித்துள்ளனர்.
வெளியேற்றம்
முன்னதாக முதல் சீசனில் ஓவியா தற்கொலைக்கு முயன்று வெளியே சென்றபோது பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைவரும் வருத்தப்பட்டார்கள். ஆனால் மதுமிதாவை வெளியேற்றியபோது யாருமே கண்டுகொள்ளவில்லையே என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். கமல் ஹாஸன் கூட மதுமிதாவுக்காக வருத்தப்படாதது பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளது.
|
அபிராமி
மதுமிதாவை அடுத்து இந்த வாரம் அபிராமி தான் வெளியேற்றப்படுவார் என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது போன்று நடக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்நிலையில் மதுமிதா, வீடு பிரச்சனையில் உரிமையாளரை கடித்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதாவது மதுவால் எப்பொழுதுமே உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறி அந்த வீடியோவை ஷேர் செய்கிறார்கள்.