8 மணி நேர ஆப்ரேஷன்.. ஆனால், தலையில் பஞ்சுகூட இல்லை..பிரபலமான சீரியலில் இப்படியா?

சென்னை: என்னத்தான் சீரியலாக இருந்தாலும் ஒருவரைமுறை வேண்டாமா என்று சொல்லும் அளவிற்கு தான் பல சீரியல்கள் லாஜிக்கே இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றன. அப்படி மொத்த லாஜிக்கையும் மறந்த சீரியலாக கார்த்திகை தீபம் சீரியல் இருக்கு, குறிப்பாக ஏப்ரல் 1ந் தேதியான இன்றைய எபிசோடை பார்த்ததும், இயக்குநருக்கு இதுகூடவா தெரியாது என திட்டத்தான் தோன்றுகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் கார்த்திகை தீபம். இதில், கார்த்திக் ராஜ், வைஷ்ணவி சதீஷ், ரேஷ்மா பசுபுலெட்டி, கிர்த்திகா அண்ணாமலை ஆகியோர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டு' இருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்றால், திருமண நாளில் கணவருக்கு பைக் வாங்கி கொடுக்க வேண்டும் என ஆசைப்படும் சீரியலின் ஹீரோயின் ஷோ ரூமுக்கு செல்லும் போது விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது.

Karthigai Deepam serial Zee tamil
Photo Credit:

8 மணி நேரம் ஆப்ரேஷன்: மருத்துவர்கள் மூளையில் ரத்தக்கசிவு இருப்பதாக சொல்லி கிட்டத்தட்ட 8 மணி நேரம் ஆப்ரேஷன் செய்தது போல காட்சி காட்டப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல், ஹீரோயினான வைஷ்ணவி சதீஷூக்கு மூளையில் நினைவு பகுதி பாதிக்கப்பட்டதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த அனைத்து விஷயத்தையும் மறந்துவிட்டதாகவும், அதை யாரும் ஞாபகப்படுத்தக்கூடாது, அப்படி செய்தால், மூளையில் பாதிப்பு ஏற்பட்டு கோமாவிற்கு சென்றுவிடுவார் என கலர் கலராக ரீல் விட்டார்கள்.

பஞ்சு கூட இல்லை: இதனால், ஹீரோயினுக்கு கல்யாணம் ஆன விஷயம் கூட மறந்து போகிறது. அந்த விஷயத்தை ஞாபகப்படுத்தினால், ஹீரோயின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்பதால், ஹீரோ கார்த்திக் அந்த வீட்டில் இருந்தே போய்விடுகிறார். இப்படி தலைக்கு மேல பிரச்சானை போய் கொண்டு இருக்க. ஹீரோயின் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வராங்க எப்படி தெரியுமா? நல்லா சீப்பு போட்டு தலைசீவி, கிளிப்பை தலையில் குத்திக்கிட்டு வராங்கா.... இது சீரியலாகவே இருந்தாலும் ஒரு லாஜிக் வேண்டாமா? இரண்டு நாளுக்கு முன்னாடி தான் கிட்டத்தட்ட 8 மணி நேரம் மூளையில் ஆப்ரஷன் நடந்தது. அதுக்குள்ள, ஜம்முனு சீவி சிங்காரிச்சா என்ன அர்த்தம். தலையில் ஒரு பஞ்சுகூட இல்லை, இதெல்லாம் உங்களுக்கு ஓவரா தெரியவில்லையா.

Karthigai Deepam serial Zee tamil
Photo Credit:

பிரபலமான சீரியலில் இப்படியா?: யூடியூப், இன்ஸ்டாகிராம் என இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியா பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. யூடியூபில் வீடியோவை போடுபவர்கள் கூட, சூழ்நிலைக்கு தகுந்த போல உடை, மேக்கப் என அனைத்திலும் கவனத்தை செலுத்தி நடிக்கிறார்கள். ஆனால், பிரபலமான தொலைக்காட்சியில், பிரபலமான சீரியலில் இப்படியா? அவங்க ஹீரோயின் தான் அதற்காக அழகாகவே காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எதார்த்தமாக இருந்தால் இன்னும் இந்த சீரியலை மக்கள் கொண்டாடுவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X