செட்ல பாதுகாப்பே இல்லை..சீரியலிலிருந்து விலகிய நடிகையின் பகீர் தகவல்!

சென்னை : ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலிருந்து விலகிய மனிஷா அஜித், செட்ல பாதுகாப்பே இலலை எனஅதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் கன்னத்தில் முத்தமிட்டால், இந்த தொடரில் ஆதிரா கதாபாத்திரத்தில் நடித்து வந்த மனிஷா திடீரென அந்த சீரியலிலிருந்து விலகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.

அவர் ஏன் சீரியலில் இருந்து விலகினார் என்பது தெரியாத நிலையில், விலகியதற்கான காரணம் குறித்து நடிகை விளக்கமாக கூறியுள்ளார்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் தொடங்கிய முதல் நாளில் இருந்தே சம்பளத்தை சரியாக தரவில்லை. பாதி சம்பளத்தை பிடித்து வைத்துக்கொண்டு மீதி சம்பளத்தை கொடுத்தார்கள். கொரோனாவின் போது கூட லீவு எடுக்காமல் நடித்து இருக்கிறேன். சீரியல் தயாரிப்பாளரிடம் பணத்தை கேட்ட போது, அனைவரும் முழு தொகையையும் கேட்குறாங்க இப்ப என்கிட்ட பணம் இல்லை என்றார். உடனே நான் சரி சார் பாதி பணம் இப்ப கொடுங்க,மீதியை கொஞ்ச நாள் கழிச்சு கொடுங்கு என்று சொன்னேன்.

ரூ. 6 லட்சம் சம்பள பாக்கி

ரூ. 6 லட்சம் சம்பள பாக்கி

ஆனால், மீதி பணத்தை எப்போது கேட்டாலும், தரேன் தரேன் என்று மட்டும் தான் சொன்னார். ஆனால், பணத்தை தரவில்லை. அத்தோடு நான் கேட்கும்போதெல்லாம் சேனலில் இருந்து இன்னும் பணம் கொடுக்கலை என்று சொன்னார். நான் சேனலில் கேட்ட போது அதெல்லாம் கொடுத்தாச்சேன்னு சொல்றாங்க. இப்படி மாத்தி, மாத்தி ஏதோ ஒரு காரணம் சொல்லிக்கிட்டே இழுத்தடிக்கிறார். இதுவரைக்கும் கிட்டத்தட்ட ரூ. 6 லட்சம் வரை சம்பள பாக்கி இருக்கு. எனக்கு பணம் செட்டில் பண்ணுங்க.

செட்ல பாதுகாப்பே இல்லை

செட்ல பாதுகாப்பே இல்லை

அது மட்டும் இல்லாமல், படப்பிடிப்பின் போது செட்ல பாதுகாப்பே இல்லை, ஷாக் அடிக்கும், ஆக்ஸிடென்ட்டாகும் அப்பக்கூட நாம நடிக்கணும், உயிருக்கு பாதுகாப்பே இல்லை என்றார். காலை 9 மணியிலிருந்து நைட் 9 மணி வரை ஷூட்டிங்னு சொல்லுவாங்க.. ஆனால், தினமும் பதினோரு மணி வரைக்கும் ஷூட்டிங் போகும் யார் என்ன கேள்வி கேட்டாலும் பதிலே சொல்லமாட்டாங்க என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.

அடுத்து யார்

அடுத்து யார்

கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில், ஆதிரா திருமணத்தை நோக்கி பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியல் தற்போது 100வது நாள் எபிசோடில் நுழைந்துள்ளது. அதே சமயம் அவருக்கு பதில் அடுத்து ஆதிரா ரோலில் யார் நடிக்க போகிறார்கள் என்று தெரியாததால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X