ஐஸ்வர்யாவை நல்லவராக்க கமலை டேமேஜ் செய்ய தயங்க மாட்டார்கள்: இயக்குனர் குமுறல்
Recommended Video

சென்னை: ஐஸ்வர்யாவை நல்லவர் போன்று காண்பிக்க கமலை டேமேஜ் செய்யக்கூட தயங்க மாட்டார்கள் என்று இயக்குனர் திரு தெரிவித்துள்ளார்.
முன்னாள் போட்டியாளர்களை அழைத்து வந்தபோதே பிக் பாஸ் ஐஸ்வர்யாவுக்காக ஏதோ செய்கிறார் என்ற சந்தேகம் ஏற்பட்டது. முன்னாள் போட்டியாளர்களையே காட்டி காட்டி ஐஸ்வர்யாவிடம் இருந்து பார்வையாளர்களின் கவனத்தை திசை திருப்பினார்.
இந்நிலையில் நேற்று போட்டுக் காட்டப்பட்ட குறும்படங்கள் மூலம் ஐஸ்வர்யா போன்று நல்லவரே இல்லை என்பது போன்று காட்டியுள்ளார் பிக் பாஸ்.

பொய்
ஐஸ்வர்யா சொன்ன பொய்யை மறைத்துவிட்டு ரித்விகா, ஜனனி ஆகியோரின் பொய்களை மட்டும் குறும்படம் போட்டு எக்ஸ்போஸ் செய்துள்ளார் பிக் பாஸ். இதன் மூலம் ரித்விகா, ஜனனி பேச்சை கேட்டுக் கொண்டு நல்லவரான ஐஸ்வர்யாவை கமல் தேவையில்லாமல் கண்டித்தது போன்ற எண்ணத்தை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளார் பிக் பாஸ்.
திரு
ஐஸ்வர்யாவை நல்லவர் போன்று காண்பிக்க கமல் சாரை டேமேஜ் செய்யக்கூட தயங்க மாட்டார்கள் என்று இயக்குனர் திரு தனது மனக்குமுறலை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.
முட்டாள் இல்லை
விஜய் டிவி கருத்துக்கணிப்பை தவிர வேறு எந்த கருத்துக்கணிப்பிலும் ஐஸ்வர்யா வென்றது இல்லை என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.
கமல்
ஐஸ்வர்யாவின் திருட்டு வேலைகளை பார்த்துள்ளோம். அப்படி இருந்தும் அவரை காப்பாற்ற நினைக்கிறார்கள். நிகழ்ச்சியை பார்க்கும் மக்களுக்கு மரியாதை இல்லை. கமல் சார் எங்கள் பக்கம் நில்லுங்கள். தூக்கிப் போடுங்க சார் இந்த ஷோவை என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
இமேஜ்
நேற்று போட்ட குறும்படங்களால் கமலின் இமேஜ் ஏற்கனவே டேமேஜாகிவிட்டது. இது எல்லாம் உங்களுக்கு தேவையா கமல் சார்?


Click it and Unblock the Notifications











