Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நான் ரொம்ப அழகா இருக்கேன்னு சொல்றாங்க… டிவி நடிகை ஐஸ்வர்யா
டிவி தொகுப்பாளினியாக அறிமுகம் ஆன இன்றைக்கு பிரபல சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. விஜய் டிவியில் '7 சி', ஜெயா டிவியில் 'இலக்கணம் மாறுதோ' ஆகிய நெடுந்தொடர்களில் நடித்து வருகிறார். அவரின் பெர்சனல் பக்கங்களை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.
நான் காலேஜ் படிக்கிறேன்
எஸ். எஸ். ஜெயின் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு விசுவல் கம்யூனிகேசன் படித்து வரும் ஐஸ்வர்யா பத்தாம் வகுப்பு படிக்கிறபோது விஜே யாக தேர்வானவராம். சில ஆண்டுகள் படிப்புக்காக லீவ் விட்ட அவர் மீண்டும் மீடியா பக்கம் வந்திருக்கிறார். பத்தாம் வகுப்பு, பிளஸ் டூவில் 96 சதவிகிதம் மார்க் எடுத்தாராம் ஐஸ்வர்யா.
அண்ணனும் தொகுப்பாளர்தான்
ஐஸ்வர்யாவின் அப்பா பாரீஸ்கார்னரில் ஐஸ்வர்யா புரவிஷனல் ஸ்டோர் வைத்திருக்கிறார். அம்மா ஹவுஸ் ஒய்ப். அண்ணன் சந்தோஷ் கலைஞர் இசையருவி டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கிறார்.
டான்ஸ் என்றால் இஷ்டம்
கிளாசிக்கல் டான்ஸ், போக் டான்ஸ் என்றால் ஐஸ்க்கு இஷ்டம். பரதம் கொஞ்சம் தெரியும். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாலும் நிறைய கல்லூரிகளுக்கு ஜட்ஜாக போயிருக்கிறாராம் ஐஸ்வர்யா. அப்படிப் போனதில்தான் சிலம்பாட்டம், கரகாட்டம், பொய்க் கால்குதிரை என்று அந்த பாரம்பரிய நடனங்களை பத்தியும் தெரிந்து கொண்டாராம்.
அழுது சீன் போட மாட்டேன்…
நிகழ்ச்சித் தொகுப்பு ஜாலியாக இருந்தாலும் அழுது ஆர்பாட்டம் பண்ணும் சீரியலில் நடிக்க மாட்டாராம் ஐஸ்வர்யா. 7சி காமெடி சீரியல் என்பதாலும், இலக்கணம் மாறுதோ தொடர் புதுமையும், புரட்சியும் கலந்த தொடர் என்பதாலும்தான் ஒத்துக்கொண்டாராம்.
விக்ரமன், பேரரசு படங்கள் காமெடி
ஐஸ்வர்யாவிற்கு சங்கர், கமலஹாசன், மணிரத்னம் படங்கள் பிடிக்குமாம். பேரரசு , விக்ரமன் படங்கள்ல வர்ற வசனங்கள் சரியான காமெடியாக இருக்கும். அதெல்லாம் மொக்கையான பஞ்ச் டயலாக்குகள் என்கிறார். இளையராஜா, ஏஆர் ரகுமான் இசையமைத்த பாடல்கள் கேட்டு ரசிப்பாராம்.
ஐ லவ் யூ சொன்னா…
பத்தாம் வகுப்பு படிக்கும் போதே நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தாலும் இதுவரைக்கும் யாரையும் ஐஸ்வர்யா காதலித்தது இல்லையாம். ஐஸ்வர்யாவை பார்த்து யாராவது பிடிச்சிருக்கு என்று சொன்னால் கூட அடிக்கமாட்டராம். நம்மளை எந்த அளவிற்கு ரசிச்சு சொல்றாங்க அவங்களைப் போய் ஏன் அடிக்கணும் என்று கேட்கிறார் அழகு ஐஸ்வர்யா.