மீண்டும் பட்டையை கிளப்ப வரும் கோலங்கள் திருச்செல்வம்... சன் டிவியில் புதிய தொடர்

சென்னை : தேவயானி நடிப்பில் கோலங்கள் தொடரை சன்டிவயில் இயக்கியவர் இயக்குநர் திருச்செல்வம்.

பெரிய திரையிலிருந்து சின்னத்திரைக்கு தேவயானியை கொண்டு வந்த புகழ் இவருக்கு உண்டு,

இந்நிலையில் நீண்ட காலங்களுக்கு பிறகு இவர் தற்போது சன் டிவிக்காக புதிய தொடரை இயக்குகிறார்.

நடிகை தேவயானி

நடிகை தேவயானி

நடிகை தேவயானி மிகச்சிறந்த நடிகையாக கோலிவுட்டில் தன்னை நிலைநிறுத்தியவர். விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். சிறப்பான பல படங்களில் இவர் முன்னணி நடிகையாக இருந்தார்.

கோலங்கள் தொடர்

கோலங்கள் தொடர்

இதையடுத்து சின்னத்திரையிலும் ஒரு வலம் வந்தார் தேவயானி. சின்னத்திரையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராக இருந்த கோலங்கள் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தேவயானி. அவரை சின்னத்திரைக்கு கொண்டுவந்த புகழ் இயக்குநர் திருச்செல்வத்தையே சேரும்.

முக்கிய கதாபாத்திரத்தில் திருச்செல்வம்

முக்கிய கதாபாத்திரத்தில் திருச்செல்வம்

அந்தத் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் திருச்செல்வம். இந்தத் தொடரின் வெற்றிக்கு நடிகராகவும் இவரது பங்கு இருந்தது. இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு திருச்செல்வம் தற்போது மீண்டும் தொடரை இயக்க வந்துள்ளார்.

எதிர்நீச்சல் தொடர்

எதிர்நீச்சல் தொடர்

இந்த முறையும் சன்டிவிக்காகவே இவர் தொடரை இயக்கவுள்ளார். தினந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் என்ற இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சில தினங்களாக சன் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் இந்த தொடரின் பிரமோக்கள் தெறிக்க விடப்பட்டு வருகின்றன.

7ம் தேதி துவக்கம்

7ம் தேதி துவக்கம்

வரும் 7ம் தேதி முதல் இந்த தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. நாச்சியப்பன் மற்றும் ஜனனி என்ற அப்பா -மகளுக்கு இடையிலான பாசப்போராட்டமே இந்தத் தொடரின் கதைக்களமாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள தொடருக்கான புதிய பிரமோவில் திருச்செல்வம் இந்த தொடர் குறித்தும் கேரக்டர்கள் குறித்தும் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X