கலக்குது பாருங்க கலர்ஸ் டிவியின் திருமணம்.. தவறாமல் பாருங்க.. நிறைய நல்ல விஷயம் இருக்கு!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் மேல்தட்டு குடும்பத்தில் கூட இளம் தம்பதி டைவர்ஸ் வாங்கணும்னா எத்தனை சங்கடங்களை அனுபவிக்கணும்னு தெளிவா சொல்றாங்க.
பாப்புலர் செலிபிரிட்டிகள் தவிர சாதாரண மக்கள் அல்லது நடுத்தர மக்களில் இளம் தம்பதி டைவர்ஸ் வாங்கணும்னா எத்தனை கஷ்டம் ,யார் யாரை பார்க்கணும்.எத்தனை கவுன்சிலிங் அட்டென்ட் பண்ணனும்னு பார்க்கும்போது நமக்கே தலை சுத்துது.

பேசாம நாம் சேர்ந்து வாழ்ந்துடலாமேன்னு சொல்ற அளவுக்குத்தான் அதன் நடைமுறைகளிருக்கு. அதிலும் ஒரே வீட்டில் வாழும் தம்பதியை சட்டம் அவ்வளவு எளிதிலே பிரிச்சு வச்சுடறதில்லை.
திருமணம் சீரியலின் சந்தோஷ், ஜனனி இருவரும் பெத்தவங்க பேச்சை கேட்டு கல்யாணம் பண்ணிக்கறாங்க. ஆனா, சந்தோஷ் சக்தின்னு ஒரு பொண்ணை காதலிக்கறான். அவ வெளிநாட்டுல படிச்சுக்கிட்டு இருக்கா.

அதனால அப்பா பேச்சை கேட்டுகிட்டு ஜனனியை கல்யாணம் செய்துக்கறான். சக்தியை விடவும், ஜனனி கூட வாழவும் மனசாட்சி ஒப்பலை.. ஸோ, ஜனனிகிட்ட உண்மையை சொல்லி நாம் விவாகரத்து பண்ணிடலாம்..இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேணாம்னு முடிவு பண்றாங்க.
முதலில் விவகாரத்துக்கு லாயரிடம் போனா அவர் பணம் பிடுங்கும் ஆளா இருக்கார். அதை எல்லாம் குடுத்து முடிச்சு ஒரு வழியா கவுன்சிலிங் வந்தா, மூணு பேர் கிட்ட கவுன்சிலிங் அனுப்பறார் லாயர்.

மூணாவதா நடிகை ஊர்வசி சைக்யாட்ரிஸ்ட்டா நடிச்சு இருக்காங்க.இவங்க கவுன்சிலிங்க் ஒவ்வொண்ணும் வித்தியாசமா இருக்கு... உண்மையா நிஜத்துல டிவோர்ஸ் அப்ளை பண்ணி பண்ணி இருக்கும் தம்பதியருக்கு இந்த கவுன்சிலிங் பெரும் உதவியா இருக்கும். .
ஜனனியும், சந்தோஷும் ஒருத்தொருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து போவதுதான் சீரியலில் இருவரின் கேரக்டர். ஊர்வசியால இதை முறியடிக்கவே முடியலை. இப்படியே இருந்தீங்கன்னா டிவோர்ஸ் கிடைக்காதேம்மா...

ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க...என்னையே ஒரு முடிவு எடுக்க முடியாம நான் கொடுத்த அத்தனை டாஸ்க்கையும் முடிச்சு இருக்கீங்க..
ஒரு பொண்ணை காதலிச்சேன்னு அவளை மறக்கமுடியலை, இவங்களை வீட்டுக்கு அனுப்பவும் மனசில்லைன்னு சொன்னா டைவர்ஸ் குடுக்க மாட்டாங்கப்பா... சரி நாளைக்கு வாங்கன்னு சொல்லி குழப்பத்தோடு அனுப்பறார் ஊர்வசி.

இந்த சீரியல் சமுதாயத்தின் இளம் தலைமுறையினருக்கு ஒரு நல்ல கருத்தை சொல்றதா இருக்கறதுனால தயக்கமில்லாம பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











