Thirumanam serial: பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லை.. காதலியுடன் டிரிப்பா?
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் பொண்டாட்டி ஜனனிக்கு உடம்பு சரியில்லை.இங்கு புருஷன் சந்தோஷ் காதலி சக்தியுடன் மலேசியாவுக்கு வரேன்னு சொல்றான்.
திருமணம் சீரியலில் சந்தோஷ் சக்தியை காதலிக்கிறான்.ஆனால், அப்பாவின் விருப்பத்தால் ஜனனியை கல்யாணம் செய்துக்கறான். அவனால், சக்தியை மறக்கவும் முடியலை, ஜனனியுடன் வாழவும் முடியலை..
கடைசியில் ஜனனியை டைவர்ஸ் பண்ண முடிவு செய்து அவளிடமும் பேசி சம்மதம் வாங்கிடறான். இப்போது கேஸ் கோர்ட்டுல நடந்துகிட்டு இருக்குது. ஜனனி சந்தோஷுடன் வாழவே ஆசைப்படுகிறாள். ஆனால், சந்தோஷ் இரு தலைக் கொள்ளி எறும்பாக தவிக்கிறான்.

ஜனனியை நெருங்க
ரொம்ப போராட்டத்துக்குப் பின்னர் ஜனனியை ஒரு கட்டத்தில் ஒதுக்க முடியாமல் போக, ஜனனியை நெருங்கி முத்தமிடப் போகும் போதுதான் ரொம்ப நாள் கழிச்சு சக்தியிடமிருந்து போன் வருது. சந்தோஷ் நான் சென்னைக்கு வந்துட்டேன்னு. அப்போது ஜனனியை விட்டு ஒதுங்கியவன்தான். ஆனாலும், சக்தியுடன் அவன் அவ்வளவு நெருக்கம் காமிக்கவில்லை.

சக்தியிடம் டிஸ்டென்ஸ்
சக்தியிடம் சற்றே டிஸ்டன்ஸ் மெயிட்டெயின் செய்துகிட்டு இருக்கான் சந்தோஷ். இப்போது ஜனனி மனசுக்குள் மறுபடியும் வெறுமை.இவனோ, சக்தியை பார்க்கவும் போகிறான்.ஜனனியிடமும் உண்மையாக நடந்துக்கறான். அவனின் முழு மனசையும் கண்டு பிடிக்க முடியாதபடி கதையின் காட்சிகள் நகருது. இருவருமே இப்போது இரு குடும்பத்தாரும் நம்பும்படி நடிக்கிறார்கள்.

சந்தோஷ் சக்தி
சக்தி, சந்தோஷை மலேசியாவுக்கு அழைத்துச் செல்ல பாஸ்போர்ட் வாங்கி விசா டிக்கெட்டும் வாங்க ஏற்பாடு செய்து விடுகிறாள். அப்போதெல்லாம் எதுக்கு இவ்வளவு அவசரம்னு சந்தோஷ் கேட்டான் தவிர, வேண்டாம் என்று மறுக்கவில்லை. அதற்குள், ஜனனியும், சந்தோஷும் மலேசியாவுக்கு புராஜெக்ட் விஷயமாப் போகட்டும்னு சந்தோஷின் அப்பா முடிவு எடுக்கிறார். இதுக்கும் சந்தோஷ் சம்மதிக்கிறான்.

ஜனனிக்கு உடம்பு
ஜனனிக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போகிறது.அவள் மேல் அக்கறை கொண்டவன் போல, ஜனனியின் உடல், கர்ப்பப்பை பிரச்சனைகளை யாரிடமும் சொலல் வேணாம் டாக்டர்.ஜனனி கண் முழிச்ச கூட அவள் கிட்டேயும் சொல்ல வேணாம்.. நான் பார்த்துக்கறேன்னு சொல்றான். டாக்ரும், பெரிய பிரச்சனை எதுவும் இல்லை.சரி பண்ணிட்டா முடியும். அதனால், நீங்க சொன்னது போலவே அவங்க வீட்டாரிடம் சொல்லிடறேன்னு சொல்றாங்க டாக்டர்.
கடைசியில் இப்போ பார்த்தால், ஜனனியால் மலேசியா புராஜெக்டுக்கு வர முடியாதுன்னு நிலைமை ஆகிட, காதலி சக்தி கூட மலேசியா வரேன்னு சொல்றான். அப்போ ஜனனி கதி?


Click it and Unblock the Notifications











