Thirumanam serial: சந்தோஷ்... டேய்.. டேய்.. போதும்டா உன் வேஷம்!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் சந்தோஷ், மனைவி ஜனனிக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில் காதலி சக்தியுடன் மலேசியாவுக்கு போக பிளான் போடறான்.
சக்தியிடம் போய், சக்தி உன் கூட மலேசியாவுக்கு வரலாம்னு முடிவு செய்துட்டேன்னும் சொல்றான். சந்தோஷத்துல சக்தி இவனை கட்டிப் பிடிச்சுக்கறா. ஆனால், இவனும், மனைவி ஜனனியும் மலேசியாவுக்கு டிரிப் போவதாக இருந்த நிலையில்தான் ஜனனிக்கு உடம்பு சரியில்லாமல் போயிருது.
இந்த நேரத்தில் சக்தியும்.அவனை தன் பெற்றோருக்கு காண்பிக்க மலேசியா கூப்பிட்டு கொண்டு இருந்ததால்.இப்போது இதுதான் சமயம் என்று மலேசியா வரேன்னு சொல்லி அவளை சந்தோஷப்படுத்திட்டு வர்றான்.

டிரிப் கேன்சல்
சந்தோஷ் அலுவலகத்திலிருக்க, அப்பா சந்தோஷ் உங்க மலேசியா பிசினெஸ் ட்ரிப்பை கேன்சல் பண்ணிட்டேன். ஜனனிக்கு உடம்பு சரியில்லாத நேரத்துல உன்னை தனியா அனுப்பலாம்னுதான் இருந்தேன்.எதுக்கு இவ்ளோ அவசரம் னு கேன்சல் பண்ணிட்டேன் சந்தோஷ்னு அப்பா சொல்றார். சரிப்பா ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னு சொல்லிடறான்.

சந்தோஷமா இருக்கு
சந்தோஷ் அலுவலகத்தில் இருக்கும் போது சக்தியின் போன் வருது.எடுத்து பேச,சந்தோஷ் உன் கூட மலேசியாவுக்கு போறதை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உன் கூட உன் பக்கத்துல உட்கார்ந்து பறக்கப் போறேன்.அந்த வானத்தை தொடும் சந்தோஷம் எனக்கு இருக்குன்னு அவ சொல்ல்கிட்டே போறா. இவன் தர்ம சங்கடத்தில் நெளிகிறான்.

ஒரு விஷயம் சக்தி
சக்தி ஒரு விஷயமும் கிட்ட சொன்னால் கோச்சுக்க மாட்டியேன்னு கேட்கறான்.அது நீ சொல்ற விஷயத்தைப் பொறுத்தது. சொல்லு என்னன்னு கேட்கறா சக்தி. என்னால் உன் கூட மலேசியாவுக்கு வர முடியாது சக்தின்னு சொல்றான்.அப்போது போனை கீழே நழுவ விட்டவள்தான்.அதுக்குப் பிறகு போனை எடுக்க நினைவின்றி இருக்கா. சந்தோஷ் கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்துட்டு விட்டுடறான்.

போன் ஜனனியிடம்
ஜனனியிடமிருந்து சந்தோஷுக்கு போன் வருது. என்னங்க எங்கே இருக்கீங்கன்னு கேட்க, ஆஃபீஸ்லதான் இருக்கேன் ஜனனி சொல்லுங்கன்னு கேட்கறான். மாமா என்னைப் பார்க்க வந்திருந்தார்.மலேசியா டிரிப்பை கேன்சல் பண்ணிட்டதா சொன்னார்னு சொல்றா. ஆமாம், அப்பா கேன்ஸல் பண்ணிட்டதா சொன்னார்னு சந்தோஷ் சொல்ல, அப்போ நீங்க கேன்சல் பண்ணலை..நான் கூட நீங்கதான் கேன்சல் பண்ணி இருப்பீங்கன்னு நினைச்சேன்னு ஜனனி சொல்றா..
நானும் நீங்க இல்லாம போக வேணாம்னுதான் நினைச்சேன் ஜனனின்னு வாய்க்கு வந்த மாதிரி போய் சொல்றான் சந்தோஷ்...டேய்.. டேய்..போதும் டா உன் வேஷம்!


Click it and Unblock the Notifications











