Thirumanam serial:காதலுக்காக இன்னும் நான் எதை இழக்கணும் சொல்லு சந்தோஷ்!

சென்னை:கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் மனைவிக்கும், காதலிக்கும் இடையில் தவிக்கும் சந்தோஷ், ஒரு நிலையான மன நிலை இல்லாதவன். அதனால்தான்,அவனால் இரு பெண்கள் இப்போது துன்பம் அனுபவித்து வருகிறார்கள்.

ஜனனியின் தோழி சக்தியை காதலிச்ச சந்தோஷ், சந்தர்ப்ப வசத்தால் அப்பாவின் பேச்சுக்கு கட்டுப்பட்டு, ஜனனியை கல்யாணம் செய்துக்கறான். ஆனால், முதலிரவு அன்று ஜனனியிடம் சக்தியை தான் காதலிப்பதாக சொல்ல, இருவரும் ஒரு மனதாக விவாகரத்து செய்துக்கலாம்னு முடிவு செய்யறாங்க.

இரு வீட்டாருக்கும் தெரியாமல் விவாகரத்துக்கு விண்ணப்பித்து, அவ்வப்போது வக்கீலைப் பார்த்தும் வருகிறார்கள்.இடைப்பட்ட காலத்தில் ஜனனி அந்த வீட்டு மருமகளாகவே வாழ ஆரம்பித்து இருக்கிறாள். என்றாலும் சந்தோஷ் மன நிலையில் மாற்றம் இல்லை.

வந்துட்டா சக்தி

வந்துட்டா சக்தி

இப்படி மாதங்கள் உருண்டோடி, ஒரு நாள் ஜனனியை சந்தோஷ் நல்ல மூடில் முத்தமிட வரும்போது, சக்தியின் போன் வருகிறது .மலேசியாவில் அப்பா அம்மாவுடன் இருக்கும் சக்தி, இந்தியா வரப்போறேன் சந்தோஷ்னு போன் செய்யறா. அன்று ஜனனியை விட்டு சுத்தமாக விலகின சந்தோஷ், சக்தியை அடிக்கடி பார்த்துட்டு வர்றான்.இடையில் ஜனனியின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போக,கொஞ்ச நாளைக்கு எனக்கு புருஷனா நடிங்க. அதுக்குப் பிறகு நீங்க சக்தியுடன் வாழுங்கன்னு கெஞ்சறா.சந்தோஷும் அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லைங்கன்னு சொல்றான்.

சந்தோஷ் மலேசியா

சந்தோஷ் மலேசியா

சந்தோஷின் அப்பா மருமகள் ஜனனி பெயரில் மலேசியாவில் ஒரு பிசினெஸ் புராக்ஜெக்ட் ஒப்பந்தம் செய்கிறார்.அதற்கு இருவரையும் மலேசியா போகச் சொல்கிறார்.அதற்குள் ஜனனிக்கு உடம்பு சரியில்லாமல் போக, சந்தோஷ் தான் மட்டும் சக்தியுடன் மலேசியா போகலாம் என்று முடிவு செய்கிறான். அதன் படி சக்தியிடமும் சொல்லிட்டு வந்துட, அவளுக்கு ஏகத்துக்கும் குஷியாகி விடுகிறது.

அப்பா கேன்சல்

அப்பா கேன்சல்

சந்தோஷின் அப்பா ஜனனிக்கு உடம்பு சரியில்லை என்று மலேசியா டிரிப்பை கேன்சல் செய்து விடுகிறார்.சக்திகிட்ட போன் செய்து சந்தோஷ் சொல்ல, அவள் மனமுடைந்து சந்தோஷின் ஆஃபீசுக்கே வந்து எதுக்கு மலேசியா டிரிப்பை கேன்சல் செய்தேன்னு சொல்லி கூப்பாடு போடறா. அவன் சமாதானம் செய்து, வீட்டுக்கு போயி பேசலாம்னு சொல்லி அழைச்சுக்கிட்டு போனதை சந்தோஷின் அண்ணி பார்த்துடறாங்க.

உன்னை காதலிச்சதுக்கு

உன்னை காதலிச்சதுக்கு

வீட்டுக்கு வந்தவுடன் சக்தியிடம், உனக்கே தெரியும் சக்தி, உன்னை நான் எவ்ளோ காதலிக்கறேன்னு. உன்னைத் தவிர நான் யாரையும் நினைச்சு கூட பார்த்ததில்லைன்னு சொல்றான். எனக்கு அதிகம் சந்தோஷத்தை கொடுத்தவனும் நீதான் சந்தோஷ், இப்போ அதிக காயப்படுத்தினவனும் நீதான்.. உன்னை பார்க்கணும்னு மலேசியாவில் இருந்து சொந்த நாட்டுக்கு வந்து, சாப்பாட்டுக்கு சம்பாதிச்சசு சொந்த நாட்டில் அகதி மாதிரி வாழ்ந்துகிட்டு இருக்கேன் சந்தோஷ்.

நீ என்னை பார்க்க வரும் அந்த கொஞ்ச நேரத்துக்காக நாள் முழுசும் அதையே நினைச்சு காத்துகிட்டு இருக்கேன் சந்தோஷ். அது எத்தனை வலி தெரியுமா? உன்னை காதலிச்சதுக்கு இன்னும் எத்தனை கஷ்டம் எல்லாம் எனக்கு தரப் போறே சந்தோஷ். இப்போஇப்படி கத்தி பேசுறியே... கல்யாணத்தப்போ உன் அப்பாகிட்ட இப்படி கத்தி பேசி இருந்தா,இப்படி நன் கஷ்டப்பட்டு இருக்க மாட்டேன் சந்தோஷ்ன்னு அழறா.

பாவம் அவளுக்கு காதல் வலி! என்ன செய்யப் போகிறான் சந்தோஷ்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X