இயக்குநர் திருமுருகன் சார்..சாரி கொஞ்சம் ஓவர் டோஸேஜ்...!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் ரோஜா பாவம் கேங் ரேப்பால் நிலை குலைஞ்சு கிடக்கா..
இந்த சமயம் பார்த்து ராஜா இதுதான் சூர்யாவை கல்யாணம் பண்ணிக்க நல்ல சான்ஸுன்னு கேம் பிளே பன்றான்.
கிட்டத்தட்ட அவனும் சைக்கோ மாதிரி நடந்துக்கறான்.. ரோஜா ராஜாவை அடைய என்ன மாதிரி ட்ரிக்ஸ் செய்தாளோ அதே மாதிரி இவன் செய்யறான்.

உயிரோட ரோஜா
ஆனா, ரோஜாவை துன்புறுத்தி அவ உயிரோட விளையாடறான் ராஜா. அவள் சொன்னதை மறைச்சுட்டு, அவளை மேலும் பேச விடாமல் தடுக்க
எப்போதும் மயக்கத்திலேயே இருக்க வைக்கறான்.

கதிருன்னு கூப்பிடுவியே
பெத்த அம்மா மாதிரி என்னை கதிரு கதிருன்னு கூப்பிட்டு என்னை உசுப்பேத்தினியே ரோஜா..இப்போ பிச்சு போட்ட ரோஜாவா கிடக்கியே. .பார்க்க முடியலைம்மான்னு நடிகர் சுந்தர்ராஜன் அழறது பார்க்க பரிதாபமா இருக்கு.

என்னைத்தான் ரோஜா
சூர்யா என்னைத்தான் கல்யாணம் செய்துக்கணும்னு ரோஜா தன்னோட கடைசி ஆசையை சொன்னான்னு சொல்லி ராஜா பொய் பேசும்போது பார்க்கறவங்களுக்கு பிபி எகிறுது.

சூர்யா சம்மதிக்க
சூர்யாவை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க ராஜா போடும் வேஷங்கள் உண்மையில் பிபி மாத்திரையைத் தேடித்தான் பலரையும் ஓட வச்சு இருக்கும்.
நிஜமா தாங்க முடியாதவங்க இந்த காட்சிகளைப் பார்க்காதீர்கள். இயக்குநர் திருமுருகன் சார்..சாரி கொஞ்சம் ஓவர் டோஸேஜ்...


Click it and Unblock the Notifications











