For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாரதி கண்ணம்மா சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுக்கும் நடிகர்...எதுக்கு தெரியுமா?

  |

  சென்னை : விஜய் டிவி-யில் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றாக இருந்து கொண்டிருந்த பாரதி கண்ணம்மா, தற்போது டிஆர்பி.,யில் மிகவும் பின் தங்கி உள்ளது. இந்த சீரியல் எப்போது முடியும்? என ரசிகர்கள் இணையத்தில் தொடர்ந்து கேட்கும் அளவிற்கு நிலைமை போய் விட்டது.

  Recommended Video

  Bharathi Kannamma | தொடர்ந்து குற்றம்சாட்டிய பாரதி, ரசிகர்கள் கேள்வி *TV | Filmibeat Tamil

  அந்த அளவுக்கு கதையில் சுவாரசியம் என்பது பெயருக்கு கூட இல்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியல் மக்களிடையே பிரபலமாக முக்கிய காரணம் இதில் முன்பு கண்ணம்மாவாக நடித்த நடிகை ரோஷினி ஹரிபிரியன் தான். தற்போது கண்ணம்மா கேரக்ட்ரில் நடிகை வினுஷா தேவி நடித்து வருகிறார். இந்த சீரியாலில் ஹீரோயினுக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த வில்லி கதாபாத்திரத்தில் வெண்பா ரோலில் நடிகை மற்றும் விஜே-வான ஃபரீனா ஆசாத் நடித்து வருகிறார்.

  2019 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது 900 எபிசோட்களை நிறைவு செய்துள்ளது. இதற்குள் முக்கிய கேரக்டர்களில் நடித்த பலரும் மாற்றப்பட்டு விட்டனர்.கதையும் எதை நோக்கி செல்கிறது என்றே தெரியாமல் போய் கொண்டிருக்கிறது. மெயின் கன்டென்ட்டை விட்டு விட்டு ஏதேதோ சீன்கள் சேர்க்கப்பட்டு பார்ப்பவர்களை சலிப்படைய வைத்து வருகிறது.

   நேச்சர் பத்தி கருத்து சொன்ன ரோஜா சீரியல் நாயகன்.. ட்ரெக்கிங் பயணத்தில் ச்சும்மா! நேச்சர் பத்தி கருத்து சொன்ன ரோஜா சீரியல் நாயகன்.. ட்ரெக்கிங் பயணத்தில் ச்சும்மா!

  தயவு செய்து சீரியலை முடிங்க

  தயவு செய்து சீரியலை முடிங்க

  பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் போதும் போதும் என்ற அளவுக்கு இயக்குநர் ட்விஸ்ட் தந்துவிட்டார். அதனால் சீரியலை சீக்கிரமாக முடித்து வேற சீரியலை டெலிகாஸ்ட் செய்தால் நன்றாக இருக்கும் அல்லது இந்த சீரியலை பகல் நேரத்திற்கு மாற்றுங்கள் என்கின்றனர் ரசிகர்கள். பல ஆண்டுகளாக "ஜவ்வு" போல இழுத்து அடிக்கும் ஒரு மேட்டர் எப்ப முடியும் என்கின்றனர் ரசிகர்கள்.

  இது நடந்தா க்ளைமாக்ஸ் தான்

  இது நடந்தா க்ளைமாக்ஸ் தான்

  கிட்டத்தட்ட எல்லா உண்மையும் வெளிவந்து விட்டது.லட்சுமிக்கு பாரதி - கண்ணம்மா பற்றி தெரிந்து விட்டது. அதே போல் பாரதிக்கு லட்சுமி - ஹேமா பற்றியும் தெரிந்து விட்டது. ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தால் போதும் சீரியலுக்கு க்ளைமாக்ஸ் தான். அதே போல் வெண்பா - ரோகித் கல்யாணமும் உறுதியாகிவிட்டது.

  புதுசா இவரும் வர போகிறாரா

  புதுசா இவரும் வர போகிறாரா

  இந்நிலையில் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்க வருகிறார் கயல் சீரியல் புகழ் நடிகர் ஃபவாஸ் ஜயானி. இவர் தற்போது கயல் சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாரதி கண்ணம்மா தொடரிலும் தோன்ற இருக்கிறார். இவர், பாரதியாக நடிக்கும் அருண் பிரசாத்துடன் ஷூட்டிங்கில் எடுத்துக் கொண்ட செல்ஃபி இணையத்தில் வெளியாகியுள்ளது. அதே நேரம் இவர் நடிக்கும் ரோல் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

  இப்போ எதுக்கு இவர்

  இப்போ எதுக்கு இவர்


  பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது, கண்ணம்மா வேலை பார்க்கும் ஹாஸ்பிட்டலில் மினிஸ்டர் ஒருவர் அட்மிட் ஆக போகிறார். இந்த சமயத்தில் தீவிரவாத கும்பல் ஒன்று துப்பாக்கியுடன் உள்ளே புகுந்து ஹாஸ்பிட்டலை ஹைஜேக் செய்ய போகிறது. இதில் கண்ணம்மா என்ட்ரி கொடுத்து, அனைவரையும் காப்பாற்ற போகிறார். இது தான் நடக்க போகிறது.

  இதுல எந்த ரோல் இவருக்கு

  இதுல எந்த ரோல் இவருக்கு

  இதனால் இந்த சமயத்தில் ஃபவாஸ் ஜயானி என்ட்ரி நடக்க போகிறது என்றால் ஒன்று தீவிரவாத கும்பலை சேர்ந்தவராகவோ அல்லது அதிரடி படையை சேர்ந்தவராகவோ தான் இருக்க முடியும். இந்த சீன் எதற்கு என ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில், இவரின் என்ட்ரி சீரியலின் டிஆர்பி.,யை தாங்கி பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  English summary
  Kayal serial fame Fawaz will be new entry in Bharathi Kannamma serial. He would play a guest role in this serial. Recently in shooting spot he shared his selfie with Bharathi aka Arun Prasath.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X