»   »  இந்தம்மாவுக்கு என்ன மைக் தொண்டையா.. பேசுனா 9 ஊருக்கு கேக்குதேய்யா...!

இந்தம்மாவுக்கு என்ன மைக் தொண்டையா.. பேசுனா 9 ஊருக்கு கேக்குதேய்யா...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தம்மா கத்துனா 9 ஊருக்கு கேக்குதே. இவர் நடிக்கும் எல்லா தொடரிலும் இவர் சத்தம்தான் ரொம்பப் பலமாக இருக்கும். சிறிய கேரக்டரோ, பெரிய கேரக்டரோ, சவுண்டு கொடுத்தே கலகலக்க எடுத்து விடுகிறார் இந்த கலக்கல் நடிகை. இவரது தொண்டைக்கு பவர் ஜாஸ்தி என்பதை உணர்ந்தோ என்னவோ, சீரியல் இயக்குநர்களும் இவருக்கு சத்தம் போட்டும் வகையிலேயே கேரக்டரைக் கொடுத்து விடுகிறார்கள்.

இவர் முதன் முதலில் மெட்டி ஒலி தொடரில் நடித்தவர். அதில் பிரபலமான பின்னர் சில தொடர்களில் நடித்த இவர் சினிமாவிலும் நடித்துள்ளார். மாயாண்டி குடும்பத்தார் படத்திலும் இவர் ராஜ்கபூருக்கு ஜோடியாக மாயாக்கா சோனாகருப்புவாக நடித்துள்ளார். அண்ணன் தம்பிகளிடையே கத்தி ஒப்பாரி வைக்கும் பாசக்கார அக்கா வேடத்தில் கலக்கியிருப்பார்.

சன்டிவியில் தற்போது ஒளிபரப்பாகிவரும் வாணி ராணி, மரகதவீணை என சீரியல்களில் கத்திக் கொண்டிருக்கிறார்.. அதாவது நடித்துக் கொண்டிருக்கிறார். தோற்றம் என்னவோ பழைய காந்திமதி பாணியில் கிராமத்து வேடத்தில் வசனங்களை நீட்டி முழக்கி இழுத்துப் பிடித்து இவர் பேசும் பாணியே தனி.. அழகோ அழகு பேரழகு.

ஏம் மருமவளே

ஏம் மருமவளே

தனது மகனுக்கு அண்ணன் மகளான அழகான மருமகளை திருமணம் செய்து வைக்க இவர் செய்யும் வில்லத்தனங்கள் படுஜோர். இப்போது வாய்க்கு வாய் ஏம் மருமவளே... ஏம் மருமவளே என்று கொஞ்சுவது கூடுதல் அழகு.

ஏய்யா… சாப்புடு ராசா

ஏய்யா… சாப்புடு ராசா

தனது கருப்பான மகனை கொஞ்சும் போது... ஏ ராசா, கண்ணு என்று கொஞ்சும் அவர், மருமகளுடன் சந்தோசமாக இருக்கிறாரா? என்பதை கேட்டு கொஞ்சுவது அழகோ... அழகு!

இந்த பால குடி

இந்த பால குடி

மருமகளுக்கும் மகனுக்கும் சரியான உறவு இல்லை என்பதை அறிந்த அந்த பாசக்கார தாய், மகளுக்கு பாதாம்பால் காய்ச்சி குடிக்க கொடுக்கிறார். அதை சாதாரணமாக வாங்கி குடித்தgவிட்டு போவதால் மனம் வருத்தப்படுகிறார்.

ஒரு ஜென்டிமெண்ட் இல்லையா?

ஒரு ஜென்டிமெண்ட் இல்லையா?

ஏய்யா நான் எவ்ளோ பாசத்தோட பால காய்ச்சி கொடுத்தா அவ மடக்குன்னு குடிச்சிட்டு போறாளே ஒரு ஜென்டி மெண்ட் இல்லையா? என்று தன் தம்பியிடம் கேட்கிறார்.

கிள்ளிருவேன் பாத்துக்க

கிள்ளிருவேன் பாத்துக்க

அம்மாவின் தொந்தரவு தாங்காத மகனோ, டோண்ட் டிஸ்டர்ப் மீ... ஐ வில் கில் யூ... என்று கூற அதற்கோ, என் கன்னத்தை ஏன் கிள்ளணும்னு சொல்லிட்டு போறான் என்று பரிதாபமாக கேட்கிறார் அந்த தாய். அதற்கு தம்பியோ? அக்கா, அவன் ஒய்ப் கன்னத்தை கிள்ளப்போறேன்னு சொல்லிட்டு போறான் என்று கூறுகிறார்.

வாணி ராணியிலும்

வாணி ராணியிலும்

கிராமத்து பாணி அத்தையாக வாணி ராணி தொடரிலும் அசத்தி வருகிறார் இந்த தீபா. தமிழ் திரைப்படங்களில் காந்திமதியின் இடத்தை இவர் நிரப்புவார் என்று எதிர்பார்க்கலாம்.

பட்டுக்குட்டி

பட்டுக்குட்டி

வாணி ராணியில் தனது மகனை இவர் பட்டுக் குட்டு பட்டுக்குட்டி என்று கொஞ்சி மகிழ்ந்ததைக் கேட்காத காதுகளே கிடையாது...

நீ அசத்து ராசாத்தி

English summary
This actress is making more noise on TV serials nowadays. Initially she has acted in Metti Oli and few films too.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil