பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட மகத்தை கட்டி வைத்து உதைத்த சிம்பு: வீடியோ இதோ
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மகத் நேராக தனது நண்பர் சிம்புவை சந்திக்க சென்றுள்ளார்.
தான் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நண்பன் சிம்பு தான் முக்கிய காரணம் என்றார் மகத். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதும் சிம்புவை மிஸ் பண்ணுவதாக கூறி வந்தார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மகத் சிம்புவை காண சென்றுள்ளார்.

மகத்
பிக் பாஸ் வீட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மகத் நேராக தனது காதலி பிராச்சியை தேடிச் செல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். முதல் வேலையாக பிராச்சியை போய் பார்த்து பேசு என்று ஜனனி கூட சொல்லி அனுப்பினார். ஆனால் மகத் தனது நண்பன் சிம்புவை சந்தித்து பேசியுள்ளார்.
சிம்பு
மகத் தான் சிம்புவை சந்தித்து பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், மகத்தை பார்த்த சிம்பு அவரின் கைகளை ஒருவரை பிடிக்க வைத்து கன்னத்தில் இரண்டு அடிவிட்டார். அதை பார்த்த ஒருவர் அவன் உள்ளே நிறைய அடி வாங்கியிருக்கிறான் இது எல்லாம் வலிக்காது என்கிறார்.

கெட்டப் பெயர்
மகத் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நான் சிம்புவின் நண்பன் என்று கூறி வந்தார். அவர் யாஷிகா, ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து கடலை போட்டு, லூட்டி அடித்ததை பார்த்த பார்வையாளர்கள் சிம்புவையும் சேர்த்து விளாசினார்கள். நல்லது செய்த சிம்புவுக்கு மகத்தால் கெட்டப் பெயர் ஏற்பட்டது தான் மிச்சம். அவர் திருந்தி வாழும் இந்த நேரத்தில் மகத்தால் அவப்பெயர் ஏற்பட்டது.

காதலி
மகத் பிராச்சியை சந்தித்து முறிந்துபோன காதலை புதுப்பிப்பார் என்று பார்த்தால் சிம்புவை சந்தித்துள்ளார். இதற்கிடையே மகத் திரும்பி வந்தால் ஏற்க வேண்டாம் என்று நெட்டிசன்கள் பிராச்சி மிஸ்ராவுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். மகத் ஆதரவாளர்களோ பிராச்சி வெளியிடும் புகைப்படங்களை பார்த்து அருமை, அழகு என்று ஐஸ் வைத்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











