மிஷன் லாஸ்லியான்னு சொல்லிட்டு மிஷன் முகென்ல பண்ணியிருக்கீங்க.. அசத்துங்க அக்கா!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகென் சேரை தூக்கும் அளவுக்கு போனதற்கு வனிதாதான் காரணம் என்கின்றனர் நெட்டிசன்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் அபிராமிக்கும் முகெனுக்கும் நடக்கும் சண்டையில் உச்சக்கட்ட கோபம் அடைந்த முகென், சேரை தூக்கி அபிராமியை அடிக்க பாய்ந்தார். அப்போது சக ஹவுஸ்மேட்ஸ்கள் அவரை தடுத்து ஆசுவாசப்படுத்துகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக அமைதியாக இருந்த பிக்பாஸ் வீட்டில் எண்ணெயை ஊற்றி பற்ற வைத்தவர் வனிதாதான். வனிதா வந்த பிறகுதான் இப்படி பிக்பாஸ் வீடு பற்றி எரிகிறது என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

மிஷன் முகென்
மேலும் மிஷன் லாஸ்லியா என்று கூறிவிட்டு மிஷன் முகெனல்லாவா செய்திருக்கிறீர்கள் என்றும் கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். சிலர் முகெனின் கோவத்தை காரணமாக்கி தங்களின் டிஆர்பிக்கு அதனை இரையாக்கி கொண்டதாக விஜய் டிவியை விளாசி வருகின்றனர்.
என்னலாம் பார்க்கனுமோ?
அய்யோ ஓ கடவுளே.. வனிதா எதற்காக வந்தாரோ அதை செய்துவிட்டார். இன்னும் என்னலாம் பார்க்கனுமோ.. என்று வேதனை படுகிறார் இந்த நெட்டிசன்.
உன் காதல் ஜீரோ
வாவ்.. அபிராமி வாவ்.. இதை உன்னிடம் இருந்து நாங்கள் எதிர்பார்த்ததுதான். முகென் மீதான உன்னுடைய காதல் ஜீரோ என்று இப்போது உறுதியாகிவிட்டது. வந்த ஒரே நாளில் வனிதா உன் பலவீனத்துடன் விளையாடி விட்டார். இத்தனை நாள் உனக்கு ஆதரவாய் இருந்த முகெனுக்கு எதிராக திரும்பிவிட்டாய் வாவ்.. என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார் இந்த நெட்டிசன்.
பத்தவச்சீட்டியே பரட்ட
பத்தவச்சிட்டியே பரட்ட.. அபி இந்த வாரம் தானா வெளியேறும்..அது நிம்மதிய கெடுக்குறதுக்குன்னே வனிதாவ அனுப்புனிங்களா பிக்பாஸ்.. என்று கேட்கிறார் இவர்.
ரெட் கார்டுதான்
வந்த வேலைய சிறப்பா செஞ்சுட்டா வனி அக்கா.. நிச்சயமாக முகெனுக்கு ரெட் கார்டுதான் என்று கூறுகிறார் இவர்.
கவினுக்கும் லாஸ்க்கும்
முகினும் அபிராமியும் பிரியனும்னு தான் எல்லாரும் ஆசைப்பட்டாங்க கமலால கூட முடியாததை வனிதா செஞ்சுருக்கு."போற போக்குல அந்த நாயை ச்சூ னு சொல்லிட்டு போற மாதிரி" வெளிய போறதுக்குள்ள இதே மாதிரி சண்டைய கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் மூட்டிவிட்டுட்டு போ என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
நாரதர் லீலைகள்
நாரதா (வனிதா) வந்த வேலை சிறப்பாக முடிந்ததா எல்லாமே வனிதாவின் நாரதர் லீலைகள். நல்லா இருந்த குடும்பத்த கெடுத்துட்டியே.. என்கிறார் இந்த நெட்டிசன்.
பத்திக்கிட்டு எரியுது
ஓ மை கடவுளே.. வனிதா வச்ச நெருப்பு இப்படி பத்திக்கிட்டு எரியுது.. முகென் சேரை தூக்குற அளவுக்கு பத்த வச்சிட்டா வனிதா என்கிறார் இந்த நெட்டிசன்.
மிஷன் முகென் ஆகிவிட்டது
வனி அக்கா நீ மிஷன் லாஸ்லியான்னு சொல்லிட்டு மிஷன் முகெனுல்ல பண்ணியிருக்க.. எப்படியோ உங்கள் மிஷன் முடிந்துவிட்டது. லாஸ்ட் பெஞ்ச் ஸ்டுடென்ட்டை ஃபர்ஸ்ட் பெஞ்சுக்கு கொண்டுவந்த பெருமை வனி அக்கவையே சேரும்.. நல்லா பண்றமா நீ.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











