Don't Miss!
- News "இது" வேற வெளியே வந்துருச்சு.. காந்திராஜ் தோட்டத்தில்.. அது பாட்டுக்கு போகுது.. திகைத்த தஞ்சாவூர்
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் சீரியல் இது தானாம்... ரேட்டிங்கை கேட்டா மிரண்டு போய்டுவீங்க
சென்னை : ஒவ்வொரு டிவி சேனலும் தங்களின் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் ரேட்டிங்கை அவ்வப்போது வெளியிட்டு, அதில் முதல் இடம் பிடித்த சீரியல் எது என்ற பட்டியலையும் வெளியிட்டு வருகின்றன. இதில் சன் டிவி, விஜய் டிவி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான்
விஜய் டிவி தான் அடிக்கடி டாப் ரேட்டிங்கை பெற்ற சீரியல்களின் பட்டியல், அவைகள் பெற்ற ரேட்டிங் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் பட்டியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதலிடத்தில் உள்ளதாக கூறப்பட்டது.
சீரியல்கள் இடையே கடும் போட்டி
விஜய் டிவி.,யில் அதிக ரேட்டிங்கை பெற்று, முதலிடத்தை பிடிக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மா இறந்த சீன் ஒரு வாரம் ஒளிபரப்பப்பட்டது. சென்டிமென்ட், சஸ்பென்ஸ் அதிகமாக இருந்தாலும் அதையும் சினிமாதனம் இல்லாமல் இயல்பாக நடப்பதை போல் காட்டியிருந்தனர். நிஜத்தில் நடப்பதை போன்றே சடங்குகள் நடத்தப்பட்டன.
வாழ்த்துக்களை குவித்த ரசிகர்கள்
இதை பார்த்து விட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் டிவி ரேட்டிங், எங்கேயோ சென்று விட்டது. டிவி ரேட்டிங்கில் அதிகபட்சமாக 9.6 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்தது. இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்தனர். இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு இருக்கும் வரவேற்பு அதிகரித்தது.
இது தான் நம்பர் ஒன்
இந்நிலையில் லேட்டஸ்டாக விஜய் டிவி மட்டுமல்ல, தமிழ்நாட்டிலேயே மெகா சீரியல்களில் அதிக ரேட்டிங்கை பெற்று, முதலிடம் பிடித்த டிவி சீரியல் எது என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ள சீரியல் வேறு எதுவும் இல்லை, விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தானாம்.
இவ்வளவு ரேட்டிங்கா
இதுவரை இல்லாத அளவாக முதல் முறையாக பாரதி கண்ணம்மா சீரியல் 11.6 டிவி ரேட்டிங்கை பெற்றுள்ளது. இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் இந்த டீமிற்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
மாற்றப்பட்ட கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் சமீபத்தில் தான் ரோஷினி ஹரிபிரியனுக்கு பதில் வினுஷா கண்ணம்மா ரோலில் மாற்றப்பட்டார். ரோஷினி தான் சீரியல் முழுவதும் நடிக்க வேண்டும். புதிய கண்ணம்மாவை ஏற்க முடியவில்லை என பலர் கூறி வந்தவர். புதிய கண்ணம்மாவின் வருகையால் இந்த சீரியலின் டிஆர்பி பெரிய அளவில் சரியும் என பலர் வேதனை தெரிவித்தனர்.
கொண்டாடும் டீம்
புதிய கண்ணம்மாவின் வருகைக்கு பிறகும் விறுவிறுப்பு, த்ரில்லிங் குறையாமல் இந்த சீரியலை கொண்டு சென்றனர். இதன் பலனாக அனைவரின் கருத்தையும் பொய்யாக்கி இந்த சீரியல் நம்பர் ஒன் இடத்திற்கு வந்துள்ளது. இதனை பாரதி கண்ணம்மா டீம் கொண்டாடி வருகின்றனர்.
-
கார்த்திக்கை கொண்டாடும் தொழிலாளர்கள்.. மீண்டும் தோற்கும் ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
தேனிலவுக்கு சென்றபோதுதான் அந்த விஷயமே புரிந்ததாம்.. ஐஸ்வர்யா ராய் என்ன இப்படி சொல்லிட்டாங்க?
-
Ajith Kumar: தலன்னு கத்திய ரசிகர்கள்.. காதை பொத்திக்கொண்ட அஜித்.. ஓட்டுப்போட்ட போது நடந்த சம்பவம்!