ஆஹா மாமியார் ஓஹோ மருமகள்...குடும்பம்னா இப்படி .இருக்கணும்...!

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் குடும்பம்னா எப்படி இருக்கணும்னு கத்துக் குடுக்கற மாதிரி இருக்கு.

அர்ஜுன் குளித்துவிட்டு வருவதற்குள் ரோஜா ஐந்து டிரஸ்களை கட்டில் மேல் வரிசையாக வச்சுட்டு, இன்னிக்கு அர்ஜுன் சார் எனக்கு பிடிச்ச டிரஸ்ஸை போட்டுக்கிட்டார்னா.. அவரே வந்து என்கிட்டே ஐ லவ் யூ சொல்லுவார்னு நினைச்சுக்கறா

டைனிங் ஹாலில் சாப்பாட்டை எடுத்து வச்சுக்கிட்டே அர்ஜுன் எப்போது கீழே வருவான்னு மேல மேல பார்த்துகிட்டு இருக்கா.

 ரோஜா என்ன பார்க்கறா

ரோஜா என்ன பார்க்கறா

ரோஜாவின் மாமியார் கல்பனா, வேலைக்காரியிடம், சுமதிக்கா ரோஜா இங்க சாப்பாடு எடுத்து வச்சுக்கிட்டு மேல பார்த்துக்கிட்டு இருக்காளே என்னவா இருக்கும்னு கேட்கறாங்க. இல்ல கல்பணாம்மா ..காலையில எழுந்து விதம் விதமா சமைச்சு வச்சுருக்கு இல்லையா.. அர்ஜுன் தம்பி சாப்பிட வருதான்னு பார்க்குதோ என்னவோன்னு சொல்றாங்க சுமதி.

 அப்படித்தான்க்கா

அப்படித்தான்க்கா

நான்கூட கல்யாணமான புதுசுல இப்படிதான்க்கா சமைச்சு வச்சுட்டு வருவாரான்னு காத்துகிட்டு இருப்பேன். ஆனா, லேட்டாயிருச்சுன்னு சாப்பிடாமலே கிளம்பிருவார்னு கல்பனா சொல்ல, லேட்டாயிருச்சுன்னு இல்லம்மா புருஷனை கைக்குள்ள கட்டிப்போட கைப்பக்குவம் வேணும் கல்பனா அம்மான்னு சுமதி சொல்றாங்க.. அக்கா அப்போ எனக்குன்னு கல்பனா வேலைக்காரி சுமதிகிட்ட செல்லமா கோச்சுக்கறது கியூட்.

 வர்றான் அர்ஜுன்

வர்றான் அர்ஜுன்

அர்ஜுன் ரோஜாவுக்கு பிடிச்ச டிரஸை போட்டுக்கிட்டு வர்றான். ரோஜா வெட்கப்பட.. ரோஜா உனக்கு பிடிச்ச டிரஸ்ஸை இன்னிக்கு போட்டு இருக்கேனான்னு கேட்கறான். அப்படி ஒண்ணும் இல்லையே சார்.. நீங்க ஒரு நாளைக்கு ஒரு டிரஸ்ஸுன்னு போட்டுக்கறீங்க..அதனாலதான் எதை எடுத்து வைக்கறதுன்னு தெரியாம அஞ்சு டிரஸ் எடுத்து வச்சேன்னு சமாளிக்கறா.

 இன்னிக்கு அஞ்சா

இன்னிக்கு அஞ்சா

ஓ...இன்னிக்கு அஞ்சு டிரஸ் எடுத்து வச்சியான்னு மாமியார் சுமதிகிட்ட சொல்றாங்க.நேத்து மூணு டிரஸ் எடுத்து வச்சாக்கா..இன்னிக்கு அஞ்சு எடுத்து வச்சிருக்கான்னு சொல்றாங்க. இப்பவும் கல்பனா நடிப்பு அபாரம்.

 எப்படி சாப்பாடு

எப்படி சாப்பாடு

அர்ஜுன் என்னடா நீ பேசாம சாப்பிட்டுக்கிட்டு இருக்கே.. ரோஜா உனக்காக காலையில எழுந்திரிச்சு விதம்விதமா சமைச்சு வச்சிருக்கா எப்படி இருக்குன்னு சொல்லுடான்னு கல்பனா சொல்ல...அர்ஜுன் பேசாம ரோஜாஒரு தோசை வைன்னு சொல்லி சாப்பிடறான்.

 உனக்கும் அதேதான்

உனக்கும் அதேதான்

நான் கேட்டதுக்கு வேற பதில் சொல்லி என்னை காய வச்சே இல்லே..இப்போ உனக்கும் அப்படித்தான். நான் மட்டும் சாப்பாடு எப்படி இருக்குன்னு ஏன் சொல்லணும்னு மனசுக்குள்ள சொல்லிக்கறான்.

முந்தானை

முந்தானை

அர்ஜுன் கை கழுவ எழுந்திரிக்க வேணும்னே டவலை கீழே தட்டிவிட்டு, தன் முந்தானையை நீட்டி நிற்கறா. அவன், கீழே கிடக்கும் டவலை எடுத்து கையை துடைச்சுக்கறான். சுமதி அம்மா.. எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வச்சு பழகுங்கன்னு சொல்லிட்டு,எல்லாருக்கும் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு கிளம்பறான்.

 சுமதிக்கா என்னது

சுமதிக்கா என்னது

என்ன சுமதிக்கா அர்ஜுன் இப்படி பண்றான்... ரோஜா இறங்கி வர்றா .. இவன் போக்கு காமிக்கறானேன்னு வருத்தப்படறாங்க கல்பனா..இல்லை கல்பணா அம்மா..சின்னஞ் சிறுசுக...இன்னிக்கு அடிச்சுக்குவாங்க நாளைக்கு கூடிக்குவாங்கன்னு சொல்றாங்க சுமதி.

 இப்படிப்பட்ட குடும்பம்

இப்படிப்பட்ட குடும்பம்

குடும்பம் என்றாலே ஒருத்தர் சந்தோஷத்தை ஒருத்தர் ரெட்டிப்பாக்க நினைக்கனுமே தவிர இருக்கற சந்தோஷத்தையும் கெடுக்கற மாதிரி இருக்க கூடாது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X