நகைச்சுவைதான் என்றாலும் இது கொஞ்சம் டூ மச்தான்!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியை ஜெயா ப்ளஸ் டிவியில் 'நீங்களும் செல்லலாம் தெருக்கோடி' என்ற பெயரில் ஒளிபரப்புகிறார்கள். சின்னக் குழந்தையிடம் கேள்வி கேட்டு அது அழுவதை கூட காமெடியாக காட்டுகின்றனர்.
அதேபோல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை பாலிமர் தொலைக்காட்சியில் பவர் ஸ்டார்ஸ் குழுவினர் 'சொல்வதெல்லாம் பச்சைப் பொய்' என்ற பெயரில் காமெடி செய்தார்கள்.
சாதாரண குடும்ப பிரச்சினையை எந்த அளவிற்கு ஊதி பெரிதாக்கி அடி தடியில் முடிக்கிறார்கள் என்பதை காமெடி கலந்து சொன்னார்கள் பவர் ஸ்டார்ஸ் குழுவினர். அதற்காக நிகழ்ச்சி நடத்தும் நிர்மலா பெரியசாமியின் மடியில் அமர்ந்து குறையை சொல்வது போல அமைத்திருப்பது நகைச்சுவைக்காகத்தான் என்றாலும் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது. ஆனால் தங்களின் நிகழ்ச்சியை கிண்டல் செய்வதை சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம் என்று நிர்மலா பெரியசாமி கூறியிருப்பதுதான் மிகப்பெரிய காமெடி.


Click it and Unblock the Notifications











