பாவம்.. இந்த வாரமும் ஏமாற்றப்பட்ட சேரன்! இப்படி கரியை பூசிட்டிங்களே!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சேரன் இந்த வாரம் ஏமாந்து போய்விட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சேரன், ஆரம்பத்தில் டாஸ்க்கின் போது சில சமயம் கோபப்பட்டார். பின்னர் ஒரு முறை ஜெயிலுக்கு போய்வந்த பிறகு டாஸ்க்கை செய்ய மாட்டேன் என அடம் பிடிப்பதில்லை.
வாரம் முழுவதும் கொடுக்கப்படும் டாஸ்க்கை சரியாக செய்து வருகிறார். அது மட்டுமின்றி, க்ளினீங் டீமாக இருந்தாலும் சரி, குக்கிங் டீமாக இருந்தாலும் சரி, வெஸ்ஸல் வாஷிங் டீமாக இருந்தாலும் எந்த ஈகோவும் இன்றி தனது பணியை சரியாக செய்து வருகிறார்.

ஆசைப்படுகிறார்
இதற்காக கமல்ஹாசனே சேரனை பாராட்டியிருக்கிறார். இதனால் ஒவ்வொரு வாரமும் தான் கேப்டனாக ஆசைப்படுகிறார் சேரன். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதல் இதுவரை சேரன் வீட்டின் கேப்டனாகவில்லை.

முதல் முறையாக
அதற்கான டாஸ்க்கில் கூட அவரால் பங்குபெற முடியவில்லை. முதல் முறையாக இந்த வாரம் தான் கேப்டனுக்காக டாஸ்க்கில் பங்கேற்றார்.

பெயின்ட் அடிக்க டாஸ்க்
அவருடன் லாஸ்லியாவும், சாண்டியும் போட்டியிட்டனர். வெள்ளை போர்டில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நிறத்தை அடிக்க வேண்டும். இதில் கடைசியில் யாருக்கு கொடுக்கப்பட்ட நிறம் அதிகமாக இருக்கிறதோ அவரே பிக்பாஸ் வீட்டின் இந்த வாரத்திற்கான கேப்டன் என அறிவித்தார் பிக்பாஸ்.

சதி செய்த சாண்டி லாஸ்
அதன்படி பெயின்ட் அடிக்க தொடங்கினர் போட்டியாளர்கள். முதலில் சேரன்தான் அதிகமாக அடித்தார். ஆனால் லாஸ்லியாவும் சாண்டியும் சேர்ந்து அவர்களின் மொத்த பெயின்ட்டையும் சேரன் அடித்து வைத்திருந்த சிவப்பு நிறத்தின் மீது ஊற்றினர்.

சாண்டி வெற்றி
இதனால் இந்த வாரமும் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாகும் வாய்ப்பை தவறவிட்டார் சேரன். பச்சை நிறமே அதிகமாக இருந்ததால் போட்டியின் நடுவரான கஸ்தூரி சாண்டி வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

மன்னிப்பு கேட்ட கஸ்தூரி
சாண்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் பாவம் சேரனின் முகம் மாறிவிட்டது. இதனை கவனித்த கஸ்தூரி சேரனிடம் பின்னர் மன்னிப்பு கேட்டார். ஆக இந்த வாரம் சாண்டியே கேப்டனாக தொடருவார். அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது.


Click it and Unblock the Notifications











